பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8. மாணிக்கவாசகர்

வரலாறு

மாணிக்கவாசகரை மணிவாசகர் என்றும், திருவாதவூரடிகள் என்றும் பெருந்துறைப் பிள்ளளை என்றும் சான்றோர் வழங்குவர். இவர் பாண்டிநாட்டில் திருவாதவூர் என்னும் ஊரில் சைவ அந்தணர் மரபில் தோன்றியவர். இளமையிலேயே இவர் நல்ல கல்விகேள்விகளில் சிறந்து சான்றோர் பாராட்டும் உயர்ந்த தகுதிபெற்று விளங்கினர். அக்காலத்தே ஆட்சிபுரிந்த பாண்டி வேந்தன் இவரது சிறப்பைக் கேள்வியுற்றுத் தன்பால் வருவித்து இவருடைய புலமை நலமும் சொன்னலமும் வினைத்திட்பமும் தேர்ந்தறிந்து தென்னவன் பிரமராயன் என்ற சிறப்பளித்துத் தனக்குரிய அமைச்சராக்கிக் கொண்டான். இவர்க்குப் பெற்றோர் இட்டபெயர் திருவாதவூரர் என்பது.

திருவாதவூரர்க்கு இளமை முதலே சிவபெருமான்பால் பேரன்பு உண்டு. பாண்டிநாட்டு அரசியலில் அமைச்சுக் கடன் பூண்டு ஒழுகிய போதும், அந்த அன்பு நாளும் பெருகியவண்ணமே இருந்துவந்தது.

இவ்வாறிருக்கையில், ஆரிய நாட்டுக் குதிரை வாணிகர் சிலர் கலங்களில் பல குதிரைகளே ஏற்றிக்கொண்டு வந்து கீழ்க்கடல் துறை ஒன்றில் இறக்கியிருந்தனர். அச் செய்தி அறிந்த வேந்தன், வேண்டுமளவும் பொன் கொண்டு சென்று ஆரியநாட்டுக் குதிரைகளுள் அரியவை பலவற்றையும் வாங்கிவருமாறு வாதவூரரைப் பணித்தான். அவரும் அவ்வண்ணமே பொன்னும் பரிசனமும் உடன்வர அக் கடற்கரை நகர் கோக்கிச் செல்வாராயினர். வழியில் திருப்பெருந்துறை என்னும் ஊரை அடைந்த வாதவூரர், அங்கே ஒரு பொழிலில் நின்ற குருந்தமரத்தின்கீழே அடியார் சிலர் சூழ்ந்திருப்ப ஞானசிரியர் ஒருவர் கையில் ஒருஞான நூலை ஏந்திக் கொண்டு வீற்றிருப்பது கண்டார். வியப்பு மிகுதியால், ஆசிரியரை அணுகிக் கையிலுள்ள நூல் யாது என வாதவூரர் வினவவும், அவர், இது சிவஞானபோதம்