பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:298


தனன் என்று கூறுகின்றமையின், ஏனை இரண்டு புராணங்களின் கூற்றும் இதன்கட் பிழைபடுகின்றன எனவும் பரஞ்சோதியார் திருவிளையாடற் கூற்றொன்றுமே ஈண்டுப் பொருத்த முடையதாய் நிற்கின்றதெனவும் தேர்ந்துணர்ந்து கொள்க' என்று துணிந்து கூறுகின்றார், திருவாதவூரடிகள் மதுரையினின்றும் முடிவாக நீங்கித் திருப்பெருந்துறைக்குச் சென்று சேருமளவும் கூறிய திரு வாலவாயுடையார் திருவிளையாடல், மேல் நிகழ்ந்த வரலாற்றைச் சுருங்கக் காட்டி முடித்து நிற்க, பரஞ்சோதி முனிவர், மதுரையின் நீங்கிய அடிகள் திருப்பதிகள் பலவும் வணங்கிக் கொண்டு தில்லைக்குச் சென்று அங்கே புத்தரை வழக்கில் வென்று இறைவன் திருவடி நீழலை யடைந்த திறத்தைக் கூறிமுடித்தார். இங்நிலையில், திரு வாதவூரர் புராணம் ஒன்றே, அடிகள் வரலாற்றின் இறுதிப் பகுதியைச் செம்மையாய்க் கோவைப்படுத்துக் கூறு

<bதிருவாதவூரர் காலம்/b>,

தமிழிலக்கியத் துறையில் வரும் நூலாசிரியன்மார்களுடைய காலத்தை ஆராய்வதில் மாத்திரம் அறிஞர் பலர் இதுகாறும் முயன்றுள்ளனர் அவருள்ளும் திருவாதவூரருடைய காலத்தை ஆராயும் வகையில் இந்நாட்டு அறிஞரும் மேனாட்டறிஞருமாக ஆராய்ந்தோர் மிகப் பலராவ்ர். இந்நாட்டவருள் திருமலைக்கொழுந்து பிள்ளை, வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், T. பொ ன் ன ம் பலம் பிள்ளை முதலியோர் திருவாதவூரடிகள் கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டினராவர் என்றனர். சுவாமி வேதாசலம் என்னும் உயர்திரு மறைமலையடிகள் கி. பி. மூன்றாம் நூற்றாண்டினர் என்றனர் : கா. சுப்பிர மணியப் பிள்ளையவர்கள் கி. பி. நான்காம் நூற்ருண்டுக்கு முந்திய காலம் என்றாராக, K .G. சேஷையரவர்கள் கி. பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ருர். K. S. இராமசாமி சாஸ்திரியார் கி. பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகலாம் என்பர். திருச்சிற்றம்பலம் பிள்ளையும்