பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சைவ இலக்கிய வரலாறு

முதலிய வடமொழிப் புலவர்கள் மேன்மையுற்றுத் திகழ்ந்தனர். அவர்கள் வழங்கிய செப்பேடுகள் பலவற்றிலும் மெய்க்கீர்த்திகளெல்லாம் வடமொழியிலேயே பொறிக்கப் பெற்றன. பல்லவ வேந்தருள் முதல் மகேந்திரவன்மன் ஒரு சிறந்த வடமொழிப் புலவனாவான். அவன் மத்த விலாச பிரகசன மென்ற நாடகத்தை யெழுதியவன். பகவத் அஜ்ஜுகம் என்றொரு வடமொழி நாடகமுண்டு; அதனையும் அவனே எழுதினானென்று சில அறிஞர் கருதுகின்றனர். திருவனந்தபுரத்தில் அண்மையில் வெளியிட்டிருக்கும் நாடகங்கள் பல பாசகவி யெழுதியன எனப் படுகின்றன. சொப்பனவாசவதத்தை முதலியன, பாசகவி யெழுதிய நாடகங்களின் சுருக்கமென்றும், அவை பல்லவ வேந்தரவையில் நடித்துக் காட்டற்கென்றே சுருங்கத் தொகுக்கப்பட்டனவென்றும் அறிஞர்கள்[1] கருதுகின்றனர்.

வடமொழியில் வல்ல வேதியர்கட்குப் பல்லவ வேந்தர்களால் மிக்க சிறப்புக்கள் செய்யப்பட்டன. இவ்வேதியருள் நான்கு வேதம் வல்லவர்களும் ஆறங்கம் வல்லவர்களும் கிரம வித்தர்களும் பட்டர்களும் திரிவேதிகளும் எனப் பலர் இருந்திருக்கின்றனர். ஜேஷ்டபாத சோமயாஜி என்பாருக்கு இரண்டாம் நந்திவன்மன் வழங்கிய காசாக்குடிச் செப்பேட்டின் ஒரு பகுதியைத் தமிழ்ப்படுத்திக் காட்டுதும்:

“இராஜாதிராஜ பரமேஸ்வர நந்திவன்ம மகாராஜர் பரமேஸ்வரப் போத்த ராஜ்யத்தை ஆட்சிபுரிகையில் இந்திரனுக்குப் பிரஹஸ்பதி போலப் பல்லவ வேந்தனை நந்திவன்மனுக்குப் பிரதம மந்திரியாகிய பிரம்மஸ்ரீ ராஜர் வேண்டிக்கொண்டபடிக் கடல்போன்ற வேதங்களில் வல்லவனும் சாம வேதத்தைக் கேட்டார் மகிழும்படி ஓத வல்லவனும் ஆறங்கங்களையும் கற்று வல்லவனும் சுருதி மிருதிகளின் அமிர்தத்தைப் பருகினவனும் கருமகாண்ட ஞான காண்டங்களில் வல்லவனும், நாடக அலங்கார சாகித்திய


  1. 1. Pallavas of Kanchi p. 111.