பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

சைவ இலக்கிய வரலாறு

பயப்போரில் தோற்றோடிய வரகுணவேந்தன் சோழ நாட்டில் தங்கிச் சிவத்தொண்டு புரிந்து "சிவலோகம்" பெற்றான் என்பது வரலாற்றுக்கும் உண்மைக்கும் மாறுபடுகிறது : மற்று, முதல் வரகுணமகாராசர் அவ்வாறு தங்கி மேம்படுதற்கேற்ப வரலாறு அமைந்திருப்பது காணுங்கால், அடிகளார் சிறப்பிக்கும் வரகுணபாண்டியன் முதல்வனே என்பது தேற்றமாம்.

இனி, திருவிடைமருதூர்க் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்றைக்காட்டி, அதன்கண் "உடையார் திருவிடைமருதூருடையார் திருக்கற்றளியில் மாணிக்கக் கூத்தற்கு அமாவாசி தோறும்" என்ற தொடரில் காணப்படும் "மாணிக்கக்கூத்தன்்" என்ற பெயரருமை அடிகள் உள்ளத்தில் நன்கு பதிந்திருந்தது என்றும், அதனால் அவர் தாம் பாடிய திருவாசகம் திருக்கோவைகளில் பன்முறையும், மாணிக்கக்கூத்தன் என்ற பெயரைப் பரிந்தோதி இன்புறுகின்றார் என்றும் கூறி, இவ்வாற்றால் எல்லாம் அடிகள் இரண்டாம் வரகுணன்காலத்தவராவர் என்று வற்புறுத்துகின்றார் திரு. T. P. பழனியப்பப் பிள்ளை. அவர் காட்டும் கல்வெட்டு, கி. பி. பதினேராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த முதல் இராசராசனது ஆட்சியாண்டு பதினெட்டுக்குப் பின்தோன்றியதாகும் : அக்கல்வெட்டுத் திரு விடைமருதூரை, "உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரை மூர் நாட்டுத் திருவிடைமருது" என்று குறிப்பதனல் இது விளங்குகிறது. உய்யக் கொண்டான் என்பது, முதல் இராசராசனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று அவன் சோழநாட்டைத் தன் ஆட்சியிற் பதினெட்டாமாண்டில் வள நாடாகப் பிரித்த காலத்தில் காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் இடைப்பகுதியை உய்யக்கொண்டார் வளநாடு எனப் பிரித்துப் பெயரிட்டான். அதற்கு முன்னெல்லாம் இத் திரைமூர்நாடு தென்கரைத் திரைமூர்நாடு என்றே வழங்கி வந்திருக்கிறது. "ஶ்ரீமதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மற்கு ஆண்டு 16-வது தென்கரைத் திரைமூர் நாட்டுத்

[1]


  1. 1. Ins. No. 694. S. I. I. Vol. V. p. 290; A. R. No. 130 of 1895.