பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

319

றைத் தெய்வப் புலவரான சேக்கிழார் பெருமான் போன்ற உண்மையாராய்ச்சி கனிந்த சான்றோர் முன்னின்று பாடாது போனது சைவ இலக்கிய உலகிற்குப் பெருந்தவக் குறையாயிற்று என எண்ண வேண்டியவர்களாகின்றோம்.

அடிகள் வரலாறும் அவர் வழங்கிய நூல்களும்

இனி, திருவாதவூரடிகள் வரலாற்றிற் காணப்படும் நிகழ்ச்சிகளோடு இயைபுற அவர் வழங்கியுள்ள திருப்பாட்டுக்களைக் காணலாம்.

அடிகள், திருப்பெருந்துறையில் முதன் முதலாக ஞானகுரவனக் கண்டபோது அவர் கையில் சிவஞான போதம் என்னும் நூலை ஏந்தியிருந்தனர் எனத் திருவாதவூரர் புராணம் கூறாநிற்க, திருவாலவாயுடையார் புராணம், தம்மைக் கண்டதும் அன்புருவாய்ப் பணிந்து நின்ற திருவாதவூரார்க்கு, ஞானகுரவன், “சின்மய அஞ்செழுத்தைச் செவிப்புலத்து உபதேசித்தான்”[1] என்று கூறுகிறது. இதனை ஆராய்ந்த மறைமலையடிகள், “அவர் காலத்துச் சிவஞான போதம் இருந்ததில்லை” யென்றும், “அந்நூல் அறிவுறுக்கப்பட்ட தென்னும் வரலாறு பொருந்தாது” என்றும், “அந்நூற் பொருள் அறிவு நூலாராய்ச்சிக் கட்படுவதாகலின், அவை யெல்லாம் முன்னரே முற்றும் உணர்ந்து போந்த அடிகட்கு மறித்தும் அவற்றையே மெய்க்குரவன் அறிவுறுத்தினுன் என்றல் அருளுரை மரபோடு மாறாம்” என்றும் கூறி, அகச்சான்ருக, “என்னேயோர் வார்த்தையுட்படுத்துப் பற்றினாய்”[2] என்றும், சிவபுராணத் தொடக்கத்தில் “நமச்சிவாய” என்றும் கூறி யருளுவதை எடுத்துக் காட்டித் திருவாலவாயுடையார் புராணம் கூறுவதே பொருத்தமென வற்புறுத்துகின்றார்கள்.

ஞானகுரவனாகி வந்து அருளுரை வழங்கியோன் சிவபெருமானே என்பது சைவ நூன்மரபு. அம்மரபே பற்றி,


  1. திருவாலவா. 27 : 47.
  2. திருவாச. செத்தி. 2.