பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

321

குதிரை வாங்கக் கொணர்ந்த பொன்னைத், திருப்பெருந்துறையில் ஞானகுரவனது அருளுரையால் சித்தம் திரிந்து இவமாகி நின்று அடிகள் சிவப்பணியில் செலவிட்டது பற்றி அரசனும் பிறரும் அவரை இகழ்ந்து வைதனர் என வரலாறு கூறுகிறது.

இனி, திருவாசகம், "நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து, சிவமானவா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ "[1] என்றும், "சித்தமல மறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்" [2] என்றும் அடிகள் சித்தம் திரிந்து சிவமான திறத்தையும், "ஏசா நிற்பர் என்னே உனக்கு அடியான் என்று பிறரெல்லாம், பேசா நிற்பர்"[3] என்றும், "அடியே நினைந்துருகி மத்தமனத் தொடுமால் இவன் என்ன மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் தத்தம் மனத்தன பேச"[4] நின்றார் என்றும் கூறு கிறது.

மதுரையில் திருவாதவூரடிகள் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கித் தானும் ஒரு குதிரை வணிகர் தலைவனாய் வந்தான் என்பது வரலாறு. இதனை, "குதிரையைக் கொண்டு குடநாட தன்மிசைச், சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்" [5] என்றும் " பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான், கொற்றக் குதிரையின் மேல் வந்தருளி"[6] என்றும். "வண்சாத்தினோடும் சதுரன் பெருந்துறையாளி அன்று, மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகையறிவார்"[7] என்றும் பல படியாக அடிகள் ஒதுகின்றார். "அரியொடு பிரமற்கு அளவறியொண்ணுன், நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்" [8] எனவும், "ஒருங்கு திரை உலவு சடை உடையானே, நரிகளெல்லாம் பெருங் குதிரை ஆக்கியவாறு அன்றே உன் பேரருளே" [9]


  1. 1. தெள்ளேன . 4.
  2. 2. அச்சோ. 1.
  3. 3. கோயில் மூத்த, 6.
  4. 4. திருச்சதக. - 3.
  5. 5. கீர்த்தி, 27-8.
  6. 6. திருவம்மா. 20.
  7. 7. திருவார்த்தை 10.
  8. 8. கீர்த்தி. 35-6.
  9. 9. திருவே சறவு. 1.

SÏV–-21