பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

சைவ இலக்கிய வரலாறு


யாய் மெலிவது கண்கூடு ; அதனனை இறைவனது அருள் பெறாதொழியின் தான்கெடுவதொருதலை என்பது விளக்குதற்குத் “தாயாய் முலையைத் தருவானே தாராதொழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ”[1]' என்றும், இளங்குழவிகள் பொன்னாலும் மணியாலும் இயன்ற பொருள்களின் அருமை அறியாது எறிந்தொழியும் செயல்கண்டு, அதனை, இறைவன் அருட்குரவனாய்ப் போந்து ஞானமருள முற்பட்ட காலத்தில் தான் அவனது அருமை உணராமல் புறக்கணித்த திறத்தை நினைந்து வருந்துவார், மையிலங்கு நற்கண்ணி பங்கனே வந்து எனைப் பணிகொண்டபின், மழக் கையிலங்குபொற் கிண்ணம் என்றலால் அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்[2] ” என்றும், வானத்து முழும்திதோன்றின் அதனைப் பற்றி விளையாட நினைந்து இளங்குழவிகள் அழும் செயல் கண்ட அடிகள், திருக்கோவையாரில், தலைவியது பதிநோக்கி அதன் புகலருமை: நினைந்து வருந்தும் தலைவன் செயலில் வைத்து, “வானுந்து மாமதி வேண்டி அழும் மழப்போலும் அன்னோ, நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை. நன்னெஞ்சமே”[3] ' என்னும், அவளது அருமை கேட்டு அழிந்த உள்ளத்தனாய், “விசும்புற்ற திங்கட்கு அழும் மழப் போன்று இனி விம்மி விம்மி, அசும்புற்ற கண்ணோடல் அறாய் கிடந்து”[4]' என்றும் பாடுவனமேலேகூறிய கருத்தை வற்புறுத்துகின்றன. -

திருவாதவூரடிகள் பரந்த உலகியலறிவில் சிறந்து விளங்குகின்றார்; மேலும் அவர் மக்கள் வழக்கில் காணப்பட்டவற்றையும் ஏனைப் பொருள்களின் குணஞ் செயல்களையும் நுணுகி நோக்கிப் பயின்ற பயிற்சி மிக்கும் விளங்குகிறார், அவருடைய பாட்டுக்கள் உலகியலவென்று திருவருணிலையில் நின்று உளமுருகிப் பாடியனவாதலால், அவரை அறியாமே அப்பயிற்சி உணர்வுகள் தாமே வெளிப்படுகின்றன.


  1. 1. ஆனந்த 5.
  2. 2. திருச்சத. 92.
  3. 3. திருக்கோவை.147.
  4. 4. திருக்கோவை, 198.