பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் 357

குறளிலும் காண்கின்ருேம். இப்பாவை தோலாற் செய்து ஆட்டப்படுவதும் உண்டென்றும், சாங் தி, விநோதம் எனப்படும் கூத்துவகையுள் விநோதம் அறுவகைப்படும் என்றும், அந்த ஆறனுள் தோற்பாவைக் கூத்து ஒன்று என்றும் அடியார்க்கு நல்லார் குறிக்கின்ருர் இத்தோற் பாவைக் கூத்தை இலக்கிய நெறியில் முதற்கண் எடுத்து மொழியும் வாதவூர் அடிகள், சீலம் நோன்பு செறிவு அறிவு என்பன. இன்றித்தாம் வீழ்ந்து கிடப்பதாகக் கூறலுற்று, . சிலமின்றி நோன்பின்றிச் செறிவேயின்றி நோன் பின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனே' என்று கூறுகின்ருர்,

இனி, அறத்தையும் அறங்கிடந்த நெஞ்சுடையாரையும் அறவை என்பது பண்டைய புறநானூறு சிலப்பதி காரம் முதலிய நூல்களிற் காணப்படுவது. அறவு (அறுதல்) எனப்படும் தொழிற் பெயராகக் கொண்டு 1. அறவையேன் மனமே கோயிலாகக் கொண்டு" என் றும், 'அறவை என்று அடியார்கள் தங்கள் அருட்குழாம் புக விட்டு நல்லுறவு செய்தென உய்யக் கொண்ட பிரான்' என்றும் வழங்கியருளுகின்ருர், -

போதருதல் என்பது வருதல் எனப் பொருள்படுவ தொரு சொல். இது போதரல் எனவும் வரும். இதனைப் போரல் என மரூஉ வாக்கி வழங்கும் முறையொன்று இடைக்காலத்தே தோன்றியுளது. அதனை அடிகளும் மேற்கொண்டு, 'ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன் கழற்கே" என்றும், சென்ருர் போரும் பரிசு புகன்றனரோ " என்றும் வழங்குகின்ருர். இவ்வாறே சிக்கென, அதெந்துவே, அறையோ, சோத்து என்பன முத லாகிய சொற்கள் அடிகள் அருளிய நூல்களில் காணப் படுகின்றன.

1. ஆனந்த 3. 2. புறம். 390. 3. சிலப். 22 : 1.16. 4. பிடித்த. 6. 5. சென் னி, 7. 6. யாத்திரை. 9. 7. கோவை. 182.