பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டினத்துப்பிள்ளையார்

375.


திருவெண்காடர் ஏனைச் சிறுவருடன் தோணியேறிக் கடற்குட் சென்று விளையாடுகையில் ஒரு சிறுவனைச் சுறா மீன் ஒன்று விழுங்கவும், உடனே திருவெண்காடர் அதன் தலையில் உதைக்கவே, அஃது இறந்தது ; வேறுருவில் அது மணிக்கிரீவன் என்ற கந்தர்வனாய் மாறிச் சென்றது; சிறுவனும் உயிருப்ந்தான்.

மருதவாணன் கடாரத்திலிருந்து வந்த முத்தைக் கண்டு அதில் நீர் இருப்பதாகக் குற்றம் கூறிப்பின் பட்டினத்தார் வியக்க, அதனையுடைத்து உண்மையை நிலை நாட்டினன். மருதவாணன் கடல் வாணிகம் செய்து மரக்கலம் நிறைய எரு முட்டை கொணர்ந்தான். அவற்றைச் சோதிக்கையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாணிக்க மணியிருந்தது.

திருவெண்காடரான அடிகள் துறவு பூண்டு வீடு தோறும் இரந்துண்டு திரியக்கண்டு மனம் பொறாத அவர் தமக்கையார் நஞ்சு கலந்த அப்ப உணவுதர, அடிகள் அதனேயேற்றுத் “தன்வினை தன்னைச் சு டும், ஊட்டப்பம் வீட்டைச்சுடும்”' என்று சொல்லி ஒரு துண்டை வீட்டின் கூரையிற் செருகவும், வீடு தீப்பற்றிக் கொண்டது. திரு வெண்காடர் திருவாரூரில் இருக்கையில், அவர்க்குத் தொண்டு செய்து வந்த சிறுவன், அடிகள் ஆணைப்படியே தன் அத்தை மகளை மணந்து சிலகாலம் வாழ்ந்து இறந்து போகவும், அடிகள் அவனை யெழுப்பினார்.[1]

காலம்

பட்டினத்தடிகள், திருஞான சம்பந்தர் முதலிய மூவரையும், ' “வித்தகப் பாடல் முத்திறத்தடியர்” ' என்றும், திருவாதவூரடிகளைத் “திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளை” " என்றும், அவர் காலத்தில் வாழ்ந்த முதல் வரகுண பாண்டியனே, “பெரிய அன்பின் வரகுண தேவர்” ' என்றும் பாடுவதனால், திருவாதவூரடிகள் காலமாகிய கி.பி ஒன்பதாம் நூறாண்டிற்கு முன்பு வாழ்ந்தவரல்லர் நமது பட்டினத்தடிகள் என்பது விளங்கும்.


  1. 1. திருவிடை மும். 28: 3ப்-55.