பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

சைவ இலக்கிய வரலாறு


நீறு,, கண்டிகை ஆகிய மூன்றையும் அடிகளும் வற்புறுத்துகின்றார்,[1] “மேவிய புன்மயிர்த் தொகையோ”[2] "என்னும் பாட்டில், பாசதரிசனம், பசுதரிசனம், சிவதரிசனம் என்ற முக்கூற்றுச் சித்தாந்த ஞான நெறியை விளக்கியுள்ளார். இவ்வாறே இறைவன், உயிர், உலகு என்ற முப்பொருள்களின் இயல்புகளையும்,[3] சிவனடியாரைப் பேணிவாழும் சைவத் தொண்டர் இயல்புகளையும்[4] அடிகள் ஆங்காங்குக் குறிப்பிடுகின்றார்,

பட்டினத்தடிகள் காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் வணிகர் குடியில் தோன்றிய செல்வத்தோன்றல் என அவர் வரலாறு கூறுதற்கேற்ப, அவருள்ளம் கடலில் கலம் அமைத்துச்செலுத்தும் துறையில் நல்ல பயிற்சி பெற்றுள்ளது. அவர் உலக வாழ்வைத் துறந்த காலத்தில, உடம்பைக், கலமாகவும், தீயொழுக்கம், பொய், பிணி, இடும்பை முதலியவற்றைச் சரக்காகவும், வினையை மீகாமனாகவும், கருநிலையைக் கடற்றுறையாகவும், புலன்களைச் சுறா மீனாகவும், பிறவியைக் கடலாகவும், துயரத்தை அலையாகவும், குடும்பத்தை நங்குரக் கல்லாகவும், நிறையைக் கலத்தின் கூம்பாகவும், உணர்வைப் பாயாகவும் உருவகம் செய்து, இக்கலம் கவிழ்வதன் முன் இறைவன் திருவடியாகிய நெடுங்கரையைச் சேரவேண்டும்[5] என உரைப்பதும், பிறி தோரிடத்தில், இவ்வுலகு, உடம்பு, தோல், எலும்பு, நரம்பு, முதுகெலும்பு, ஐம்பொறி, இருவினை, அறுவகைக் குற்றம், நெடுநீர் என்னும் குற்றம், மடிமை, மனம், ஆசை, நற்குண நற்செய்கைகள், காலம் ஆகியவற்றை முறையே, கடல், கலம், பலகை, ஆணி, கயிறு, கூம்பு, துடுப்பு வாயில். சரக்கு, நிறை, நங்குரநாண், நங்குரக்கல், பாய், காற்று, தீவுகள், கடலிற் காணப்படும் பாரை முதலியனவாக உருவகம்செய்து இக்கலம் உடைந்து கெடுவது கடுநரகுபுகுவதாம் என விளக்குவதும், வேறொரிடத்தில் வளியும்பித்தும் சிலேத்

.


  1. 1. திருக்கழு. மும். 21.
  2. 2. திருவிடை. மும். 13.
  3. 3. திருவொற்றி. 4
  4. 4. ௸ 7.
  5. 5. கோயில் நான். 16. .