பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டினத்துப் பிள்ளையார்

379,



கலைச்சிறப்பு மிக்குத் தோன்றுகிறது.[1] இதனருகே கடலிருந்து இனிய காட்சியளிக்கிறது:[2]

நூற் பொருள் ஆராய்ச்சி

அடிகள் காலத்தில், சிவாகம வழியொழுகும் சித்தாந்த சைவம் தமிழகத்தில் சிறந்த இடம் பெற்றிருந்தது. இச்சமயம்,வேதங்களையும் சிவாகமங்களையும் தனக்குச் சிறந்த முதனூல்கள் என்றும், அவற்றை இறைவனை அருளினான் என்றும் கூறும் ; மேலும், வேதங்கள் பல தலைப்பட்ட தெய்வங்களை வழங்குதலால், சிவாகமங்களைக் கண்டு ஞானம், யோகம் கிரியை சரியை என்ற நான்கு. பாதங்களாக வகுத்துச் சமய வொழுக்கங்களையும் பக்தி நெறியையும் வடித்துச் சிவபெருமானே அருளினான் என்றும் கூறுகிறது. இக்கருத்துக்களைப் பிரமான முகத்தாலும் இலக்கண முகத்தாலும் தெள்ளித்தெளித்துக் கூறுவது பற்றி இச் சிவாகமங்கள் சித்தாந்தமென்றும் வழங்கும். இவற்றை இனிது கண்ட அடிகள், காழி நகர்க் கண் உள்ள கோபுரங்களையும் மணிமேடைகளையும் எடுத்தோதுமிடத்து, "வேதமே யொப்பெனவோது கோபுரமும்" " சிவாகமம் என வொளிர் தவாமணி மேடையும்'[3] என்று உவமையில் வைத்து உரைக்கின்றார், சிவாகமங்களைச் சித்தாந்தம் என்று ஆகமங்களே பெயர் குறிக்கின்றன.[4] அக் கருத்தையே வாங்கி, அடிகள், "கைவல நெல்லியங் கனியது போலச், சைவ சித்தாந்த தெய்வ ஆகமத்தை, வரன்முறை பகர்ந்த திருமலர் வாய'[5] என்று கூறுகின்றார். இச்சித்தாந்த நூல்கள், ஆணவம், கன்மம், மாயை எனக் கூறும் மலம் மூன்றையும் "பேரிகல் ஆணவக் காரிருள் மின் தொடர் வல்வினை வன்றொடர்' ' மாயை மாமாயை யாய பேய் '[6] என்று குறிக்கின்றார். சித்தாந்த சைவர்கட்கு இன்றியமையாதன எனப்படும் திருவைந்தெழுத்து, திரு.

-


  1. 1. திருவொற். ஒரு. 6.
  2. 2. திருவொற். ஒரு. 7.
  3. 3. திருக்கழு. மும் 22, .
  4. 4. இரத்தினத். திரையம். 16.
  5. 5. ௸13.
  6. 6. திருக்கழு. மும் 13.