பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

சைவ இலக்கிய வரலாறு



இனி, தன்பால் அன்புகொண்டு ஒளவையார் பாடிய அந்தாதிக்காக அவன் பொற்படாம் ஈந்ததோடு பந்த மங்கலத்துக்கு மேற்கில் அதனை அடுத்துள்ள குப்பம் என்னும் ஊரை ஒளவையார் குப்பம் எனப் பெயரிட்டு அவர்க்கு வழங்கினான்; இப்போது அ.து. அவையார் குப்பம் என வழங்கிவருகிறது.[1]' -

அக்காலத்தே வட கொங்கு நாட்டில் திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த ஐவேலி என்ற ஊரில் ஆயர் பலர் வாழ்ந்து வந்தனர்.[2] அவர்கட்கு அசதி என்பான் தலைவனாக இருந்தான். அவன் பிறந்த குடியினரான ஆயர், ஆய்ப்பாடி ஆயர் எனப்படுபவர். அசதி தமிழறிஞர் பால் மிக்க அன்புடையன். அவர்பாடும் பாட்டுக்களைக் கேட்டுப் பரிசுநல்குவதும் அவனுடைய பண்புகளுள் ஒன்று. ஒருகால் ஒளவையார் அவனுடைய ஐவேலிக்குச் சென்று அவனைக் கண்டார். அவன் அவரை மிக்க அன்புடன் வரவேற்றுச் சிறப்பித்தான். அவர் பெரிதும் மகிழ்ந்து அவன்மேல் ஒரு கோவைநூல் பாடினர். அந்நூல் முழுதும் இப்பொழுது கிடைத்திலது சிற்சில பாட்டுக்களே தனிச் செய்யுட் சிந்தாமணி, தனிப்பாடற்றிரட்டு முதலிய நூல்களில் காணப்படுகின்றன.

இக் கோவைப்பாட்டுக்களில் அசதியின் முறை செய்யும் சிறப்பு, "அறங்காட்டிய கரத்து ஐவேல் அசதி"[3] என்றும் " ஆடுங் கடைமணி ஐவேல் அசதி"[4] என்றும் குறிக்கப்படுகிறது. அசதியின் மறமாண்பினை, "அலைகொண்ட வேற்கரத்து ஐவேல் அசதி[5] ' எனவும், அழற்கட்டுக்


  1. 1. List of Villages in the Madras Presidency. (1903) under Tindivanam Ta. S. Arcot Dt. .
  2. 2. இப்போது இவ்வூர் சங்க கிரிமிட்டாவைச் சேர்ந்தது : எனினும் இப்போது இது மறைந்து போய்விட்டது : ஊர்ப் பெயர் மாத்திரம் அரசியல் கணக்கு ஏடுகளில் நிலவுகிறது.
  3. 3. தனிச் செய்யுட் சிந்தாமணி. 98.
  4. 4. ௸ 102.
  5. 5. -௸ 96.