பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பி 443

கரியன் என்னும் சொல் கரிய நிறமுடையன் என்றும், கரி போலும் முகமுடையன் என்றும் பொருள் தோன்ற நிற்கும் கயமுடைமை கண்டு, 'முகத்தாற் கரியனென்ரு லும் தனேயே முயன்றவர்க்கு, மிகத்தான் வெளியன் என்றே மெய்ம்மை யுன்னும் விரும்பு அடியார் அகத்தான்' என்று பாடுவதும், விநாயகரது யானே முகத்தை 'முகத் தது கை, அந்தக் கையது முக்கு, அந்த மூக்கதனின் அகத் தது வாய், அந்த வாயது போலும் அடும்மருப்பே' என்று இசைப்பதும் மிக்க இன்பம் தருவனவாம். மாருன ஒன்றை விரும்பினவன் கெடுவன் என்பதற்கு'நெருப்பை விரும்பும் எறும்பு போலக் கெடுவன்' என்ருெரு பழமொழி வழங்கு கிறது. இதனே, "மருப்பை யொருகைக் கொண்டு நாரை யூர் மன்னும், பொருப்பை அடி போற்றத் துணிந்தால்நெருப்பை, அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை, விருந்த எண்ணுகின்ற மலம்' எனத் தொடுத்துரைக்கின் ருர், இவ்வுலகில் உயிர்கள் உடம்பெடுத்து வினை செய்து உழலுதற்குக் காரணம் அவற்றைப் பிணித்திருக்கும் மலம் என்று திருமந்திர முதலிய ஞான நூல்கள் கூறு கின்றன. இதனை நம்பியாண்ட்ார் நம்பிகள் மலம் செய்த வல்வின் நோக்கி...மதக்களிறே, உன்னே வாழ்த்துவனே: என்று குறித்துரைக்கின்றர். இவ்வாற்ருல், நம்பிகள், சொல்லாராய்ச்சி, அணி பெறத் தொடுத்தல், பழமொழி வழக்கம், ஞானநூற் புலமை என்ற பலதுறையிலும் சிறந் திருந்தமை தெளியப்படும்.

கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்பது தில்லை அம்பலப் பெரும்ான் பேரில் நம்பிகள் எழுபது கட்டளேக் கலித்துறைப் பாட்டுக்களால் அந்தாதித் தொடையமையப் பாடியது. திருப்பண்ணியர் விருத்தம் என்ற தொடர்க்குச் சிவபெருமான் திருவருளாகிய செல்வத்தை விளைவிக்கும் பொருளமைந்த பாட்டுக்களாலாகிய நூல் என்று பொருள் கூறுவர் சீர்காழி, திரு. ப. அ. முத்துத் தாண்டவராயப்

I. திருவிரட்டை. 2. 2. திருவிரட்டை. 6. 3. டிை 7. 4. .ை 8.