பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்பையர்கோன் நாராயணன்

455

என்று இயம்புகின்றது. இதனைப் பற்றிய குறிப்புக்களைப் பிறிதோரிடத்தில் குறித்தாம்.[1] மருதாடு என்பது அச்சிறுபாக்கத்துக்கும் வந்தவாசிக்கும் இடையில் உள்ள ஓர் அழகிய வூர். தில்லைப்பதியில் உள்ள அந்தணர்களே நம்பியாரூரர் முதலிய சான்றோர், “தில்லைவாழ் அந்தணர்கள்” எனப் பொதுபடக் குறித்தனர்; அவர்க்குப்பின்வந்த சான்றோர்களில் திருவாதவூரரே முதற்கண் அவர்களது தொகையைச் சுட்டித் “தில்லே மூவாயிரவர் வணங்கநின்றேன்”[2] என்று கூறினர். அவர்க்குப்பின் பட்டினத் தடிகள், “நான்மறை யோருடன் வந்து மூவாயிரவர் இறைஞ்சி நிறைந்த உண்மைக் கடனன்றி மற்றறியாத் தில்லையம்பலம்”[3] என்று அதனை எடுத்துரைத்தாராக, அவர்க்குப் பின்னேரான இந்த நாராயணனார்

“கொடிகட் டியமணி மாளிகைத்
     தில்லையுள் கொற்றமன்னர்
முடிகட் டியமுகை சேர்கழல்
     மூவாயிரவர் முன்னின்று
அடிகட் டியகழல் ஆர்க்கநின்
     றம்பலத் தாடும் ஐயர்
வடிகட் டியபொழில் வான்றோய்

     சிராமலை மாணிக்கமே”[4]

என்று உரைப்பது ஈண்டு நினைவுகொளற் குரியதாம்.

தில்லை மூவாயிரவர்ககுச் சோழவேந்தர் காலத்தில் மன்னர்க்கு முடிசூட்டும் உரிமையிருந்தது. இதனைச் சேக்கிழார்பெருமான் கூற்றுவநாயனார் வரலாற்றில்[5] எடுத்துரைப்பதால் அறிகின்றோம். அப்பழஞ் செய்தியை இச் சிராமலையந்தாதி, “தில்லையுள் கொற்றமன்னர் முடிகட்டிய முகைசேர் கழல் மூவாயிரவர்”[6] என்று உரைப்பது ஆராய்ச்சியாளர்க்கு மிக்க இன்பம் தருவதொன்று. இறையனர் அகப்பொருள் உரைபற்றிய வரலாற்றில் பாண்டிவேந்தன் அதன் பொருள் குறித்துக் கூடற்பெருமானை


  1. இந்நூல் பக். 384.
  2. திருக்கோவை. 72
  3. திருவேகம்ப. 47.
  4. சிராமலை யந்தாதி. 67
  5. பெரிய பு. கூற்று. 4.
  6. ௸ 67.