பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

திருஞானசம்பந்தர்

திருஞான்சம்பந்தர் 77

பாற்கடல் ஈந்ததும்,1 குபேரனுக்குத் தோழமை தந்ததும்2' -சலந்தரன் தலையரிந்ததும்3, தேவர்பொருட்டு நஞ்சுண்டதும்,4 தக்கனது வேள்வியை அழித்ததும்,5 தாருகாவனத்து முனிவர்விட்ட யானையைத் தோலுரித்ததும்,6 அவர் மகளிர்பால் பலி ஏற்றதும்,திருமாலுக்குச் சக்கரம் அளித்ததும்,7 திரிபுரம் எரித்ததும்8,திருமாலும் பிரமனும் இறைவன் அடிமுடி தேடியதும்9,பிரமன் தலையைக் கொய்ததும்10,மார்க்கண்டர் பொருட்டுக் கூற்றுவனை அழித்ததும்11,காமனை யெரித்ததும்12' ஆகியவரலாறுகளும் . குறிக்கப்படுகின்றன. இராமாயண வரலாற்றிற் காணப்படும், இராமன்,'13 இராவணன்14வாலி15,சாம்புவன்,16சம்பாதி, சடாயு17முதலியோர் இறைவனை வழிபட்ட செய்திகளும், பாரதத்தில் வரும் அருச்சுனன் வழிப்பட்டுப் பாசுபதம் பெற்ற செய்தியும்18,ஞானசம்பந்தரால் குறிக்கப்படுகின்றன. இவற்றிடையே இராவணனுடன் சடாயுவும் சம்பாதியும் போர் செய்ததும்19,இராவணன் வாலியாற்கட்டுண்டதும்20, ஞானசம்பந்தரால் எடுத்தோதப்படுகின்றன்." ஆங்காங்குச் சென்றபோது அவ்வவ்விடங்களில் அக்காலத்து வழங்கிய தல வரலாறுகளையும் ஞானசம்பந்தர்-

1.ஞான 201:9 .2.ஞான 219 : 5 3.ஷ. 380: 2. 4. .ஷ22 : 1 5.ஷ. 131 :3. 6. ஷ.75:7 7 ஷ. 377 : 7. 8. ஷ.11 : 6. 9.ஷ. 48 : 9.10. ஷI31 : 7. 11 ஷ. 20 : 7.12. ஷ 361 : 2 13.ஷ.268 : 2.14. ஷ.337 : 10. பதிகந்தோறும் இராவணன் கயிலையைப் பெயர்த்த செய்தியும், திருமாலும் பிரமனும் அடி முடி தேடிய செய்தியும் கூறப்படுகின்றன.

15.ஞான.349:6.16.ஞான.291:1 17. ஷ179 : 1. 18..ஷ, 62 : 5. 19. ஷ 179 : 4.20. ஷ. 349: 8.