பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:Rh81

 -பந்தர் வரலாறு, மதுரையில் சமணர்களைக் காண்பதற்கு முன் அவர் வேறு எவ்விடத்தும் அவர்களைக் கண்டதாகக் கூறுகின்றிலது. ஆயினும், அவருடைய திருப்பதிகங்கள் ஒவ்வொன்றிலும் சமண புத்தர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுவதால், மதுரை நிகழ்ச்சிககு முன்பே அவர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. மதுரைக்கு வருமாறு அழைப்பு வந்ததும், அவர் தடையின்றிச் செல்ல உடன்பட்டதற்குக் காரணம்,அவ்வேற்றுச் சமயத்தவர்களை வேரோடு தொலைப்பதற்குக் காலமும் இடமும் கருதி யிருந்தமையேயாகும்1' என்று கூறுகின்றனர்.

இனி, ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவருடைய உடை, நடை, உரை, ஒழுகலாறு முதலியன குறித்துப் பாடியவற்றை நோக்குமிடத்து, அவர் வேற்றுச் சமயத்தவர்பால் தீராத வெம்மையுற்றுப் பாடுகின்றாரென்பது தெளிவாகிறது. சமணர் புத்தர் முதலிய வேற்றுச்சமயத்தவர் நூல்கள் அருளையே பெரும் பொருளாகக் கொண்டு நிற்கின்றன. அங்ஙனம், அந்த அருளையும் சிறந்த பொருளாகக் கொண்ட நெறியினரான ஞானசம்பந்தர் அவர்களைப் பெரிதும் வெகுண்டு பேசுவானேன் என்பது உட னடியாக நம் உள்ளத்தில் எழும் கேள்வியாகும். இதற்கு விடை காணலுற்ற பேராசிரியர் திரு. P. சுந்தரம்பிள்ளைஅவர்கள்"ஞான சம்பந்தர்முதலியஅருளாளர் உள்ளத்தில் சமண புத்தர்களாகிய பிற சமயத்தவர்பால் மாற்றருஞ் சீற்ற முண்டானதற்குக் காரணம் ஒன்று இருத்தல் வேண்டும். எனினும், இத்துணை நெடுங்காலம் கழிந்த பின்பு நாம் அதனைக் காண்பதென்பது அரியதொரு செயலாகும். புத்த சமயம், அசோக மன்னனது ஆதரவால் வட நாட்டிலும், அவர்க்குப் பின்வந்த வல்லாளர் சிலருடைய முயற்சியால், தென்னாட்டிலும் பரவி நிலைபேறு பெற்றுப் பின்னர் நாளடைவில் சீர்குலைந்து போயிருக்கலாம். அரசியற் கட்சிகள் போலச் சமயங்களும் அரசியல் வலி-

|

1. Tam. Ant. V. III p. T.

SIV-6.