உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

திருஞானசம்பந்தர்

 பரம்பொருள் உண்மை பற்றி உரை நிகழுங்கால், "அத் தகுபொருள் உண்டும் இல்லையும் என்று" சொல்லுவர் 1 எனவும் கூறுகின்றார் .புத்தர்களுடைய பிடகாகமத்தையும் ஞானசம்பந்தர் குறிக்கின்றார்2 .

"சந்துசேனன் இந்துசேனன் என ஞானசம்பந்தரால் குறிக்கப்படுபவர் சைனர் என்றும், கனகநந்தி, புட்ப நந்தி முதலியோர் புத்தரென்றும் கல்வெட்டிலாகா ஆண்டறிக்கை யுடையார்3கூறுகின்றனர். அவர்கள் ஆனைமலை நாகமலை என்ற மலைகளில் கற்குகைகள் உள்ளன. . இவற்றிற்கு அருகிலுள்ள பசுமலையில் கற்குகைகள் காணப்படவில்லை; நாகமலைக் குகையில் மூன்று கல் வெட்டுக்கள் உள்ளன 4; அவை ஆந்தைமகன் வேள் வேண்குவிரான், பொதிகைக் குவிரான் என வருகின்றன ; இவற்றின் எழுத்தமைதி காணின், இக்கல்வெட்டின் காலம் கி. மு. இரண்டல்லது மூன்றாம் நூற்றாண்டாகும்' என்றும் அவர்கள் புத்தர்கள்' என்றும் உரைக்கின்றனர். ஞான சம்பந்தர், புத்தர்களைப் போதியார்5 என்றும் வழங்குவர். ஞானசம்பந்தரால் சாக்கியர்6 எனக் கூறப்படுவோர், புத்தருள் ஒருவகையினராவர். புத்த சமயத்தைக் கண்ட சித்தார்த்தரும் சாக்கியர் மரபைச் சேர்ந்தவர் என அவர் வரலாறு கூறுகிறது. தேரர்7 எனப்படுவோரை வட நூல்கள் ஸ்தவிரவாதிகள் என்று கூறும். இவ்வாறே, சைனர்களை ஞானசம்பந்தர், அங்கதர்8 அமணர், அருகர்9: ஆகதர்10

1. ஞானசம். 297: 3. 2. ஞானசம். 13:10, 3. A. R. on S. Ep. for 1926-7, para 8. -

நன்னூலாசிரியர் பவணந்தி யெனவும், வெண்பாப் பாட் டியலுடையார் ஆசிரியர் வச்சணந்தி யெனவும் வருவது காணுங்கால், கனக கந்தி முதலிய பெயருடையாரைப் புத்தரெனவே கோடல் பொருந்துவதாக இல்லை.

4. A. R. No. 621-3. of 1926

5. ஞானசம். 148; 10. 6 ஞானசம். 68 : 10. 7. ஷ 6 : 10. 8. ஷ 297: 10. 9. ஷ 366 : 10. 10. ஷ; 297 : 2.