பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:84

 ஆரம்பர்1 கவணர்2குண்டர்3 சமணர், பிராந்தர் 4எனப் பல பெயர்களால் குறிக்கின்றார், சைனர் தங்கள் முதல்வனை அருகன் என்றலின், அவர்கள் அருகர், ஆருகதர், ஆகதர், ஆதர் எனக் குறிக்கப்படுகின்றனர். எல்லாப் பொருட்கும் அணுவை முதற் காரணமாகக் கோடல்பற்றிச் சமணர் ஆரம்பவாதிகள் எனப்படுதற்கு இயைபுண்மை யால், அவர்களை ஞானசம்பந்தர் ஆரம்பர்" என்று குறிக்கினறார், ஆருகதர் அநேகாந்த வாதிகளாதலால், அவர்களைப் பிராந்தர் என்று கூறுகின்றார். ஆருகத சமய முதனூல்கள், பூருவம், அங்கம், பகுசுருதியென மூவகையாய் ஆகமம் என்ற பெயர் கொண்டு நிற்கின்றன ; அவற்றுள் பூருவாகமங்கள் மறைந்து போயின அங்காகமங் களும் பகுசுருதி ஆகமங்களும் கிடைக்கப் பெறுகின்றன. அங்காகமங்களை மேற்கொண்டு நிற்பது பற்றி ஆருகதர் அங்கதர் எனவும் அழைக்கப்பட்டனர்.5 மேலும் அவர் ஆருகதரைக் கவணர் எனக் கூறுவதன் கருத்து விளங்கவில்லை. இனிக் குண்டர் என்பது பற்றி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறையில் தோன்றிய கட்டுரை யொன்று"அமணராவார் மனை வாழ்க்கையைத்துறந்தவர்என்பது, குண்டராவார்மனை மாண்புரைக்கும் உள்ளமுடையவராய் இல்லறத்தில் நின்று ஒழுகுவோர் என்பதும் துணிந்து கூறப்படும்" என்றும், 'தம் சமயத் தலைவராகிய மகாவீரர்குண்டக்கிராமத்திலிருந்து நிகழ்த்திய மனை வாழ்க்கையில் ஈடுபட்ட சமண் மக்கள் தாம் குண்டக் கிராமத்து அமர்ந்து, தம் சமயத் தலைவர் மேற்கொண்டொழுகிய இல்லறத்தில் நின்றமை பற்றித்

1. ஞானசம். 10 10. 2. ஞானசம். 271; 10. 3..ஷ 5 : 10. 4. ஷ 27 : 10. 5. பூருவாகமம் மகா வீரரால் முதற்கண் வழங்கப்பட்டன வென்றும், பின்பு அவர்மாணவரும் பிறரும் அங்காகமங்களை வழங்கினரென்றும், அங்கங்கட்குத் திருஷ்டிபாத மெனப் பெயருண்டென்றும், அவற்றின் தோற்றக்காலம் கி.மு. மூன்று நான்காம் நூற்றாண்டென்றும்கூறுவர்-( ,An Epitome of jainisn p .690) .Rule