பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

திருஞானசம்பந்தர்|

 சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகர் '1 எனக் கடற் காட்சியை எடுத்தோதுவார். மருதப்பகுதியில் நெல் விளை யும் வயல்களைக் காண்பார், வயலிடையே நீர் நிலையும் அதன்கண் மலர்ந்துவிளங்கும் தாமரை முதலிய நீர்ப்பூக்களும் அவர் உள்ளத்தை மலர்விக்கும். மலர்ந்த தாமரை மேல் அன்னப்புள் வீற்றிருப்ப, காற்றால் அசையும் தாமரையிலே எழுந்து குடைபோல் அப்புள்ளிற்கு நீழல் செய்ய, கரையருகே விளைந்து தலைசாய்ந்து கிற்கும் நெற் கதிர் சாமரைபோல் அசைந்து இரட்டுவது, அவர் உள்ளத்தைக் குளிர்விக்கிறது. அவர் பேருவகைகொண்டு, "செறியிதழ்த்தாமரைத் தவிசில் திகழ்ந்து ஒங்கும் இலக்குடைக் கீழ்ச் செய்யார் செந்நெல், வெறிகதிர்ச் சாமரை இரட்ட இளவன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே 2" என்று பாடு கின்றார். இத்திருவீழிமிழலை இம்மருத நிலத்து நல்லூர்களுள் ஒன்று.

திருவண்ணாமலைக்குச் செல்லும் திருஞானசம்பந்தர் அந்த அண்ணாமலையின் சாரலான முல்லைப்பகுதியில் எருமைகளும் ஆயரால் மேய்க்கப்படுவது காண்கின்றார், மேதியொன்று தன் கன்றை நினைந்து வழிதப்பிச்சென்று கத்துகிறது. ஆயன் அதனைக் காணாது தன் குழலை ஊதுகின்றான். பொதுவாக எளிதில் இசைவயப்படாத எருமை, அவனது குழலோசை கேட்டதும் சென்று, தன் இனத்தோடே கூடுகிறது. அதனை ஞானசம்பந்தர்," கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேற் குழலூத, அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலை " என்று மகிழ்ந்து பாடுகின்றார், - திருக்காளத்தி குறிஞ்சி நிலப்பகுதி. அங்கே ஞான சம்பந்தர் சென்றபோது அதன் இயற்கை நலம் அவர்க்கு இன்பம் நல்குகிறது. ஒரு பிடியானை தன் கன்றுடனே சென்று சந்தனமரத்தின் குளிர் தழையைத் தின்று இனிது உலாவிச் செல்ல, அதன் கன்று மகிழ்வுடன் விளை- _______________________________ 1. ஞானசம். 66 : 1. 2. ஞானசம். 132:2. 3. ஷ. 69 : 6.