பக்கம்:சைவ சமயம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சைவத் திருமுறைகள் - II

ஏத்துதல், அகநெகிழ்ச்சியோடு கோவிலுக்குச் செல்லுதல், சிலர் பாடிக்கொண்டே கோவிலுக்கு வருதல், ஆடவரும் பெண்டிரும் கோவிலை வலம் வருதல், பாடுதல், பணிதல், மூன்று சந்தி வணக்கம் முதலிய வழிபாட்டு முறைகள் இவரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன. " நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

நித்தலுமெம் பிரானுடைய கோவில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்

சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்

ஆரூரா என்றென்றே அலரு நில்லே. ' என்பன போன்ற அப்பர் கூறும் அறிவுரைப் பாடல்கள் பலவாகும். அவை படித்து இன்புறற்

t_jfr 6t) EðT,

ஏழாம் திருமுறை

இத்திருமுறை ஏறத்தாழ ஆயிரம் பாடல்களைக் கொண்டது. அப்பரது பிரசார வன்மையால்

தொண்டைநாடு சைவ நாடாக மாறியது; சம்பந்த ரது தொண்டினுல் பாண்டியநாடு சிவமணம் கமழும் நாடாக மாறியது. ஆதலால் சமணமும் பெளத்த மும் வலி குன்றிவிட்டன. அதனுல் அப்பர் சம்பந் தர்க்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கழித்து வந்த சுந்தரர்க்குப் புறச்சமய எதிர்ப்புத் தோன்றவில்லை. ஆதலின், அவர் பாக்களில் புறச்சமயக் கண்டனம் மிகுதியாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. அப்பர் சம்பந்தர் சென்ற நெறியைப் பின்பற்றியே சென்றவராதலால் சுந்தரர் பாக்களிலும் பல இடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/103&oldid=678245" இலிருந்து மீள்விக்கப்பட்டது