பக்கம்:சைவ சமயம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 103

மான நாயன்மார் செய்த திருப்பணிகளைத் தம் பாடல்களில் குறித்துள்ளார். இவர் பாக்களிலும் சம்பந்தர் பாக்களிலிருந்து அறியப்படும் இசை, நடனம் முதலிய பலவகைக் செய்திகளையும் நிரம்ப அறியலாம். மைலாப்பூர் இவர் காலத்தில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. பல்லவ மகேந் திர வர்மன் இசை, நடனம், நாடகம் இம் மூன்றை யும் வளர்த்தவளுதலால், அவன் காலத்தில் வாழ்ந்த அப்பருடைய பாடல்களில் இசை, நடனம் பற்றிய குறிப்புக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. சமணரைப் பற்றிய குறிப்புக்களும் இவர் பாடல் களில் பலவாகப் காணப்படுகின்றன. சம்பந்தரைப் போலவே இவர் ஊர்ப்பெயரும் அவ்வூர்க் கோவிற் பெயரும் புதியனவாகப் பல இடங்களில் குறிப்பிட் டுள்ளார். சீகாழிக் கோவிலைப் புள்ளினங்கள் ஏந்தின கதை போன்ற மிகப்பல புராணக் கதை கள் (Mythologies) இவர் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இரும்புதல், பேருர், தஞ்சைத் தளிக்குளம், இடவை, காம்பீலி, எழுமூர் முதலிய பல வைப்புத்தலங்கள் இவரால் குறிக்கப்பட்டுள் ளன. பள்ளி என்று முடியும் சிவத்தலங்களும், வீரட்டம், குடி, ஊர், காடு, வாயில், மலை, ஆறு, குளம், களம் என முடியும் தலங்களும் இவரால் தொகைப்படுத்திக் குறிக்கப்படுகின்றன. இப் பெரியார் சூலை நோயால் வருந்தியது முதலிய தம் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பலவற்றைத் தம் பதிகங் களிற் பாடியுள்ளார்; தாம் கண்ட விழாக்களைப் பற்றிய விவரங்களைப் பல பதிகங்களில் கூறியுள் ளார். அடியார் மலரும் நீரும் கொண்டு கோவில் செல்லுதல், வாழி-போற்றி ' என்று இறைவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/102&oldid=678244" இலிருந்து மீள்விக்கப்பட்டது