பக்கம்:சைவ சமயம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 சைவத் திருமுறைகள் - II

மார் பற்றிய குறிப்புக்கள், பலவகைச் சிவனடியா ரைப்பற்றிய குறிப்புக்கள், தம்முடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள், கோவில்களில் நடைபெற்ற விழாக் கள், வழிபாட்டு முறைகள், புராணக் கதைக் குறிப் புக்கள், சைவசமயக் குறிப்புக்கள் முதலியவற்றைக் காணலாம். தலத்தின் இயற்கையழகை விளக்கும் பாடல்களில் செடிகள், கொடிகள், மரங்கள், மலர் கள் யாவும் குறிக்கக்ப்பட்டுள்ளமை, சம்பந்தரது கவனிக்கும் ஆற்றலையும் இயற்கை அழகை அது பவிக்கும் மனப்பண்பையும் நன்கு விளக்கும். சம்பந்தர் காலத்தில் சீகாழி கடலருகில் இருந்தது, நாகை சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது, என்பன போன்ற வரலாற்றுக் குறிப்புக்கள் பல அவர் திருப்பதிகங்களில் காணப்படுகின்றன. அவர் காலத்தில் மறையவர்கள் மிகுதியாக வாழ்ந்த தலங் கள் எவை என்பதையும் வேறுபல பொதுக் கருத் துக்களையும் அவர் பாக்கள் தெரிவிக்கின்றன. அவர் காலத்தில் பல ஊர்களில் இருந்த கோவில் கள் தனிப்பெயர் தாங்கி இருந்தன என்பதையும் நாம் பல பாக்களால் அறியலாம். செங்காட்டங் குடியில் கணபதிச்சரம் என்ற கோவிலும், ஆவூரில் பசுபதீச்சரம் என்னும் கோவிலும், நரையூரில் சித்தீச்சரம் என்ற கோவிலும், மயிலாப்பூரில் கபாலீச்சரம் என்ற கோவிலும், இவ்வாறே பல ஊர்களில் வேறுவேறு பெயர்கொண்ட கோவில் களும் இருந்தன.

அப்பர் திருமுறைகள்

அப்பர் பாடல்களும் ஏறத்தாழ மூவாயிரத்

துக்கு மேற்பட்டவை. சம்பந்தரைப் போலவே

அப்பரும் தம் காலத்தவரும் தமக்கு முற்பட்டவரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/101&oldid=678243" இலிருந்து மீள்விக்கப்பட்டது