பக்கம்:சைவ சமயம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சைவத் திருமுறைகள்- II முதல் மூன்று திருமுறைகள்

சைவ சமயத் திருமுறைகள் பன்னிரண்டு. முதல் மூன்று பாடியவர் சம்பந்தர். ஞானசம்பந்தர் ஏறத்தாழ 300 பதிகங்களைப் பாடியுள்ளார். ஒவ் வொரு பதிகமும் பத்து அல்லது பதிைேரு பாக் களைக் கொண்டது; பதிகங்கள் அக்கால வழக் கிலிருந்த இந்தளம், குறிஞ்சி முதலிய பண்களில் பாடப்பட்டன. ஒவ்வொரு பதிகத்திலும், அப்பதி கம் பாடப்பெற்ற ஊரின் இயற்கை யமைப்பு, அவ் வூர்க் கோவிலில் உள்ள சிவபெருமானின் சிறப்பு, அவனை அடைவதால் பெறத்தகும் பயன், இராவ ணன் கயிலையைப் பெயர்த்துப் துன்பப்பட்டமை, சமணர்-பெளத்தர் வசவு என்பன பெரும்பாலும் இடம் பெற்றிருத்தல் காணலாம்.

" போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு

வாதவகை யுண்டுபலபொய் ஒதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை

நன்றதுணர் வீருரைமினே ஆதியெமை யாளுடைய அரிவையொடு

பிரிவிலிஅ மர்ந்தபதிதான் - சாதிமணி தெண் டிரைகொ ணர்ந்துவயல்

புகஎறிகொள் சண்பை நகரே.” சம்பந்தர் பாடல்களில் தலங்களின் இயற்கை யழகு, பல வரலாற்றுச் செய்திகள், இசை, நடனம், சமணர் பெளத்தர் பற்றிய செய்திகள், தமக்கு முன்னிருந்தவரும் தம் காலத்தவருமான நாயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/100&oldid=678242" இலிருந்து மீள்விக்கப்பட்டது