பக்கம்:சைவ சமயம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழகத்துக் கோவில்கள்

என்று புறநானூறு புகலல் காண்க. இதல்ை அக்காலத்தில் கோவிலும் லிங்கமும் இருந்தமை நன்கறியலாம்.

கி. பி. 2-ஆம் நூற்ருண்டில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காணப் படும் கோவில்கள் பல.

மணிமேகலையில்,

'காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்

அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்” எனவரும் அடிகள்-வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார் இவர்க்குக் கோவில்கள் இருந்தமையை வலியுறுத்துகின்றன. சுடுமண் (செங்கல்) கோவில் கள் குன்றுகள் போல உயர்ந்திருந்தன என்பது அறியத்தக்கது.

அற்புத வேலைப்பாடு

இக்கோவில்களும் அரசர் மாளிகைகளும் மண்டபங்களும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து, நேரறிகயிறிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது, -

"ஒருதிறம் சாரார் ஆரைநாள் அமயத்து

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/11&oldid=678153" இலிருந்து மீள்விக்கப்பட்டது