பக்கம்:சைவ சமயம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 11

டைக்காலத்தில் கோவில்கள் இருந்தமையும் விமா னங்கள் உண்மையும் அறியலாம்.

இனித் தமிழகத்தில் மகேந்திரனுக்கு முன்பே கோவில்கள் இருந்தமைக்குக் கல்வெட்டுக்களே சான்ருதல் காண்க. (1) திருக்கழுக்குன்றத்துக் கோவிற் பெருமானுக்குக் கந்த சிவிடிய பல்லவன் (கி. பி. 436-460) நிலம் விட்டதாகவும், அதனை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்தியதாகவும் ஆதித்த சோழன் கல்வெட்டுக் கூறுகிறது. (2) தென்னவனுய் உலகாண்ட கோச்செங்களுன் (கி. பி. 450-500) திருவக்கரையில் பெருமானுக்கு ஒரு கோவில் கட்டியிருந்தான். (அதிராசேந்திரன் அதனைக் கல்லாற் புதுப்பித்தான்) செம்பியன் மாதேவியார் திருவக்கரைக் கோவிலின் கரு வறையைக் கல்லாற் புதுப்பித்தார்; அவர் திருக் கோடிகாவில் இருந்த செங்கல் விமானத்தையும் கருங்கல் விமானமாக அமைத்தார். "

சங்க காலத்துக் கோவில்கள்

பண்டைத் தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திலே வீரர் வணக்கத்திற்குரிய கோவில்கள் இருந்தன. முருகன், திருமால், காடுகிழாள் முதலிய தெய்வங்கட்குக் கோவில்கள் இருந்தன. தொகை நூல்களில் சிவபெருமான், முருகன், திருமால் பலராமன் இவர்கள் சிறப்புடைக் கடவுளராகக் கூறப்படுகின்றனர். ஆலமர் செல்வற்கு நீலநாகம் நல்கிய கலிங்கத்தை, ஆய்வேள் அளித்தனன் 5. K. A. N. Sastry's Cholas vol. II, Part I. P. 486;

vol. 1. P. 385. 6. M. E. R. 36 of 1931,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/10&oldid=678152" இலிருந்து மீள்விக்கப்பட்டது