பக்கம்:சைவ சமயம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழகத்துக் கோவில்கள்

(2) மகேந்திரனுக்கு முன்னரே தமிழர் கோவில் கட்டத் தெரிந்திருந்தனர். ஆயின், அவை மண், மரம் முதலியவற்ருலாகி அழியத்தக்கன.'

(3) இங்ங்னம் அழியத்தக்க பொருள்களால் அமைந்த கோவில்களையே மகேந்திரன் கற்களில் செதுக்கி அமைத்தான். '

தரையும் சுவர்களும் செங்கற்களால் ஆனவை; மேற்கூரை மரத்தால் ஆயது. அங்கங்கு இணைப் புக்காக ஆணிகள் முதலியன பயன்பட்டன. இங் ங்னம் அமைந்த கோவில்களே அவை. இத்தகைய கோவில்களை இன்றும் மலையாள நாட்டிற் காண லாம். இங்ங்ணம் கோவில்களை அமைப்பதில் தமி ழர் பண்பட்டிராவிடில், திடீரெனக் கி. பி. 7-ஆம் நூற்ருண்டிலிருந்து பல கோவில்கள் தமிழ்நாட்டில் தோன்றிவிட்டன எனல் பொருளற்றதாய்விடும். " " விமானங்கள்- 'துயது, கலப்பு, பெருங் கலப்பு என மூவகைப்படும். கல், செங்கல், மரம் முதலியவற்றில் ஒன்றைக் கொண்டே அமைக்கும் விமானம் தூய விமானம் எனப்படும்; இரண் டைக்கொண்டு அமைவது கலப்பு விமானம் எனப்படும் ; பல பொருள்களால் அமைவது பெருங் கலப்பு விமானம் ஆகும், " " என்பது கட்டடக்கலை நூல் கூற்ருகும். இதலுைம், பண் 1. இத்தகைய கோவில் திருவெண்காட்டுப் பெருங் கோவிலுள் இருக்கிறது. அதன் அற்புத வேலைப்பாடு வியக்கத்தக்கது. 2. Longhurst - "The Pallava Architecture', Part 1, pp.

22—23. 3. R. Gopinatha Rao- 'Epièaphia Indica”, Vol.15, P15 4. Ramraz-'Essay on lndian Architecture,' PP48-49.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/9&oldid=678151" இலிருந்து மீள்விக்கப்பட்டது