பக்கம்:சைவ சமயம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தமிழகத்துக் கோவில்கள்

தமிழகத்தில் இன்றுள்ள கோவில்கள் எப் பொழுது தோன்றின? அவற்றிற்கு மூலம் என்ன? கோவிற் கலைஉணர்வு தமிழர்க்கே உரியதா? பண்டைக் காலத்தில் கோவில்கள் எவற்றிற்குப் பயன்பட்டன? நமது கடமை என்ன? என்பன போன்ற கேள்விகட்கு விடைகாணலே இவ்வா ராய்ச்சிக் கட்டுரையின் நோக்கமாகும்.

கோவிலும் கல்வெட்டும்

"செங்கல், சுண்ணும்பு, மரம், உலோகம் இவை இல்லாமல் மும்மூர்த்திகட்கு விசித்திர சித் தன் (மகேந்திர பல்லவன்-அப்பர் காலத்தவன்) அமைத்த கோவில் இது”, என்னும் கல்வெட்டு மண்டபப்பட்டு என்னும் இடத்துக் கோவிலிற் காணப்படுகிறது. இதன் காலம் கி. பி. 615-630 ஆகும்.

இக்கல்வெட்டால் அறியத்தக்க செய்தி

45 677 fr6A] SINT : —

(1) மகேந்திரன் காலத்திற்கு முன் தமிழகத் தில் கற்கோவில்கள் இல்லை. இருந்த கோவில்கள் செங்கல், சுண்ணும்பு, மரம், உலோகம் இவற்ருல் ஆனவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/8&oldid=678150" இலிருந்து மீள்விக்கப்பட்டது