பக்கம்:சைவ சமயம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 113

12. நம்பியாண்டார் நம்பி பத்துச் சிறுநூல் களைப் பாடியுள்ளார். அவற்றுள் ஆறு நூல்கள் சம்பந்தரைப் பற்றியவை. அவை (1) சம்பந்தர் திருவந்தாதி, (2) சம்பந்தர் - திருச்சண்டை - விருத்தம், (3) சம்பந்தர்-திருமும்மணிக்கோவை, (4) சம்பந்தர் திருவுலாமாலை, (5) சம்பந்தர் திருக் கலம்பகம், (6) சம்பந்தர் திருத்தொகை என்பன. இந்த ஆறிலும் சம்பந்தர் வரலாற்றுக் குறிப்புக்கள் அனைத்தும் அடங்கி விட்டன. (7) திருந்ாவுக் கரசர்-திரு ஏகாதச மாலையில் அப்பரைப் பற்றிய சிறந்த வரலாற்றுக் குறிப்புக்கள் காண்கின்றன. (8) கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் கண்ணப்பர், சேரமான், சுந்தரர், சாக்கியர், அதி பத்தர், கலிக்காமர், மாணிக்கவாசகர், வரகுண பாண் டியன் ஆகியோர் குறிக்கப்பட்டுளர். (9) விநாயகர் திரு இரட்டை மணிமாலை 20 செய்யுட்களைக் கொண்டது. (10) திருத்தொண்டர்-திரு அந்தாதி என்பது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகை யைப் பின்பற்றி விரித்துரைக்கப்பட்ட நூலாகும். இதில் 63 நாயன்மார் வரலாற்றுக் குறிப்புக்களும் ஒன்பது தொகை அடியார் பற்றிய குறிப்புக்களும் காண்கின்றன. இந்த அந்தாதி சேக்கிழாரது பெரிய புராணத்திற்குச் சிறந்த அடிப்படையாகும். பன்னிரண்டாம் திருமுறை

இது சுந்தரர் வரலாற்றையும் அவரால் திருத் தொண்டத் தொகையில் குறிக்கப்பெற்ற அடியார் வரலாறுகளையும் கூறும் பெருங்காவியமாகும். இஃது ஏறத்தாழ 4250 செய்யுட்களை உடையது. தமிழ்நாட்டில் சைவ சமயம் பற்றிச் செய்யப்பட்ட முதற்காவியம் இதுவேயாகும். இது திருமுறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/112&oldid=678254" இலிருந்து மீள்விக்கப்பட்டது