பக்கம்:சைவ சமயம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சைவத் திருமுறைகள் - II .

(2) காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டைமணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்னும் மூன்று நூல்களைப் பாடியுள்ளார். (3) ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவர் ஒவ்வொரு சிவத்தலத்தையும் பற்றிப் பாடிய கூேடித்திர வெண்பா என்னும் நூல் அடுத்து இடம் பெற்றுள்ளது.

4. சோமான் பெருமாள்-பொன் வண்ணத்தந் தாதி, திரு ஆரூர் மும்மணிக்கோவை, திருக் கைலாய ஞானஉலா என்னும் மூன்றையும் பாடி யுள்ளார். 5. நக்கிாதேவநாயனர்-கண்ணப்ப தேவர் திருமறம் முதலிய பல நூல்களைப் பாடியுள்ளார். 6. கல்லாடதேவநாயனர்-இவரும் கண்ணப்பரைப் பற்றி முப்பத்தெட்டு வரிகள் கொண்ட அகவற்பா பாடியுள்ளார். 7. கபிலதேவ நாயனர் - இவர் விநாயகர்மேல் இரட்டை மணிமாலை பாடியுள்ளார். 8. பரணதேவ நாயனர் சிவபெருமான் திருவந்தாதி என்ற நூலைப் பாடியுள்ளார். 9. இளம்பெருமா னடிகள் என்பவர் ஒரு பதிகம் பாடியுள்ளார். 10. அதிகார 'அடிகள் விநாயகர்மீது மும்மணிக் கோவை பாடியவர். 11. பட்டினத்தடிகள் கோவில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிபுை மருதூர் மும்மணிக் கோவை, திரு வேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது என்னும் நூல்களைப் பாடியுள் ளார். இவை படிக்கப் படிக்க இன்பம் தருவன. கோயில் நான்மணி மாலையில்,

“... . . . . . நின் -

தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்

தென்னையும் எழுத வேண்டுவன்.” - எனவரும் அடிகள் உள்ளத்தை ஈர்க்கத்தக்கவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/111&oldid=678253" இலிருந்து மீள்விக்கப்பட்டது