பக்கம்:சைவ சமயம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 111

தில்லையின் சிறப்பு - இவ்வொன்பதாம் திருமுறையில் பல பாக்கள் தில்லையைப்பற்றியே காண்பதற்குரிய காரணம் யாது? ஐந்தொழில் இயற்றுதற்கு ஏதுவாகிய திருநடனம் செய்யப்படும் ஒளி நிலையமாகத் தில்லை விளங்குவதால், அதனை எல்லாத் தலங்களினும் உயர்ந்ததாகச் சைவ நூல்கள் கூறும். அத்துடன், முதற்பராந்தகன் காலமுதல் சோழவேந்தர் தில் லேயைப் பல்லாற்ருனும் சிறப்பித்து வந்ததும், தில்லைப் பெருமாளைத் தம் குலநாயகன் என்று கூறிவந்ததும், தில்லையைச் சோழர் காலத்தில் உயர்த்திவிட்டன. இத்தகைய காரணங்களால் தான் தில்லை மேற்சொன்ன ஆசிரியர்களால் பெரிதும் போற்றப்பட்டது என்னலாம்.

பத்தாம் திருமுறை

திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திரு முறை இதுபற்றிய விவரங்கள் சென்ற கட்டுரை யிற் கூறப்பட்டுள்ளன. பதினேராம் திருமுறை

இதனுட் கூறப்பட்ட பாக்களின் நூல்களின் ஆசிரியர் (1) சிவபிரான்; (2) காரைக்காலம்மையார், (3) ஐயடிகள் காடவர்கோன், (4) சேரமான் பெரு மாள் நாயனர், (5) நக்கீரதேவநாயனுர், (6) கல்லாட தேவ நாயனுர், (7) கபிலதேவ நாயனர் (8) பரண தேவ நாயனுர், (9) இளம்பெருமான் அடிகள், (10) அதிரா அடிகள், (11) பட்டினத்துப் பிள்ளை யார், (12) நம்பியாண்டார் நம்பி என்போராவர்.

(1) சிவபிரான் பாணபத்திரருக்குப் பொன் தரும்படி சேரமான் பெருமாளுக்கு விடுத்த ஒரு பாடல் இத்திருமுறையில் முதலில் காணப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/110&oldid=678252" இலிருந்து மீள்விக்கப்பட்டது