பக்கம்:சைவ சமயம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சைவத் திருமுறைகள் - 11

டியக்குடி, தஞ்சை - இராசராசேச்சரம், திருவிடை மருதூர் ஆகிய பத்துத் தலங்கள் மீது பத்துத் திரு விசைப் பாக்கள் பாடியுள்ளார்.

பூந்துருத்தி நம்பி காட நம்பி என்பவர் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தவர். இவர் திருவாரூர், தில்லை என்னும் இருபகுதிகள்மீது இரண்டு திருவிசைப் பாக்கள் பாடியுள்ளார். இப் பெரியார் கணிம்புல் லர், கண்ணப்பர், திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந் தரர், சேரமான் பெருமாள் ஆகிய நாயன்மாரைத் தம் பாக்களில் பாராட்டியுள்ளார்.

கண்டசாதித்தர் முதற் பராந்தக சோழன் மகளுர், இவர் தில்லையைப்பற்றி ஒரு திருவிசைப்பா பாடியுள்ளார்; அதனில்தம்தந்தைசிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்தான் என்பதைக் குறித்துள்ளார்,

வேணுட்டு அடிகள் என்பவர் தென்திருவாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரும் தில்லையைப் பற் றியே ஒரு திருவிசைப்பா பாடியுள்ளார்.

திருவாலி அமுதனர் சீகாழியை அடுத்துள்ள திருவாலி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரும் தில்லையைப் பற்றியே நான்கு திருவிசைப் பாக்கள் பாடியுள்ளார். ' தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்" என்று தம் பாவில் குறித்ததி லிருந்து, இவருடைய தமிழ்ச் சுவையும் இசையறி வும் புலனுகின்றன.

புருஷோத்தம நம்பி என்பவர் தில்லையைப் பற் றியே இரண்டு திருவிசைப் பாக்கள் பாடியுள்ளார். சேதிராயர் என்பவர் திருக்கோவலூர் அரசர் என்று கருதுதல் தகும். இவர் தில்லையைப்பற்றி ஒரு திருவிசைப்பா பாடியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/109&oldid=678251" இலிருந்து மீள்விக்கப்பட்டது