பக்கம்:சைவ சமயம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 109

கொள்கைகளுள் ஒன்று. இதனைச் சிவஞ்ான போதம் 12-ஆம் சூத்திரம் நன்கு வற்புறுத்துகிறது. மாணிக்கவாசகர் இத்தகைய அடியார் குழாத்தில் தம்மை வைக்குமாறு இறைவனை வேண்டுகிருர், இவ்விரண்டும் திருவாசகத்தின் உயிர்நாடி என்று கூறலாம். - திருக்கோவையார்

ஆன்மாவாகிய தலைவன் கடவுளாகிய தலைவி யைப் பல சோதனைப் படிகளைக் கடந்து கூடுதலே திருக்கோவையார் என்னும் நூலிற் குறிக்கப்படும் பொருளாகும். பாக்கள் இனிமையும் பொருளாழ மும் உடையவை.

ஒன்பதாம் திருமுறை

இதனில் திருமாளிகைத் தேவர் முதலிய ஒன் பது அடியார்கள் பாடிய பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாவும் திரு இசைப்பா' எனப்படும். திருமாளிகைத் தேவர் திருவிடைமருதூர் மாளிகை மடத்தைச் சேர்ந்தவர். இவர் தில்லையைப் பற்றிய நான்கு இசைப்பாக்கள் பாடியுள்ளார்.

சேந்தனர் திருவிழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகியவற்றின் மீது மூன்று திரு விசைப் பாக்களும், தில்லைமீது திருப்பல்லாண்டும் பாடியுள்ளார்.

கருவூர்த்தேவர் முதலாம் இராசராசன் காலத் தவர். இவர் சமாதி பெரியகோவில் திருச்சுற்றில் இருக்கிறது. இப்பெரியார் தில்லை, திருக்களந்தைஆதித்தேச்வரம், கீழ்க்கோட்டுர்-மணியம்பலம், திரு முகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/108&oldid=678250" இலிருந்து மீள்விக்கப்பட்டது