பக்கம்:சைவ சமயம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108. சைவத் திருமுறைகள் - II

பலவகை விளையாட்டுக்களின் போது இறைவனு டைய சிறப்பியல்புகளைப் பலபடியாக எடுத்துக் கூறி ஆடுவதாக இவர் பாடியுள்ளார். அவ்விளை யாட்டுக்கள் (1) அம்மானை, (2) பொற்சுண்ணம் இடித்தல், (3) தும்பியாடல், (4) தெள்ளேணம் கொட்டல், (5) சாழல், (6) திருப்பூவல்லி கொய்தல், (1) உந்திபுறத்தல், (S) தோள்நோக்கம் ஆடல், (9) ஊசலாடல் என்பன. இவ்வகை விளையாட்டுக் களில் இறைவன் புகழைப் பாடியாடுதல் சம்பந்தர் காலத்திலும் இருந்தது என்பது சம்பந்தர் பாக்க ளால் தெரிகிறது.

திருவாசகம்

முதல் ஏழு திருமுறைகள் பண்ணுேடும் தாளத் தோடும் பாடத்தக்கவை. ஆயின், திருவாசகப் பாடல்களுள் பெரும்பாலன அத்தகையவை அல்ல. முன்னவற்றுள் சமயப் பிரசாரம் காணப்படும்; திருவாசகத்தில் அது காணப்பெருது; மாணிக்க வாசகர் எங்ங்ணம் உழன்று உழன்று இறைவனது அருளைப் பெற்ருர் என்பதே இந்நூலிற் காணப்படு வது. இது படிப்பார் உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. ' உன் குறைகளை ஒப்புக் கொண்டு கடவுளுக்கு முன் அழு; அவனை அடைய லாம், ' என்பதே திருவாசகத்தின் உயிர்நாடிப் பகுதிகளில் ஒன்று. இங்ங்னம் தம் குறைகளை உள்ளவாறு உணர்ந்து வருந்திக் கடவுள் முன் அழுதல் என்பது எல்லோர்க்கும் எளிதில் இயல் வது அன்று. ' கடவுளிடம் என்றும் இறவாத காதல் பெற விரும்பும் பக்தன், அன்பை அடிப் டையாகக் கொண்ட மெய்யடியாருடன் தொடர்ந்து இழகவேண்டும், ” என்பது சைவ சித்தாந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/107&oldid=678249" இலிருந்து மீள்விக்கப்பட்டது