பக்கம்:சைவ சமயம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 107

இம்மூவர் அறிவுரை - இம்மூவரும் சைவசமயப் பொதுமக்களுக்குக் கூறிய அறிவுரைகள் யாவை? “ சமண-பெளத்த நூல்கள் பொய்ந்நூல்கள். அவற்றை நம்பாமல் சிவனை வழிபடுங்கள் , தீவினை அற்று நன்மை அடைவீர்கள்; திருப்பதிகங்களைப் பாடிப் பயன் பெறுங்கள் ; எவரும் ஐந்தெழுத்தோதி மேன்மை பெறலாம்; ஐந்தெழுத்தே நல்ல துணை ஐம்பொறி களையும் அடக்குங்கள்; மனத்தை ஒருவழிப்படுத்தி இறைவனே நினையுங்கள்; சிவனைக் காண்பீர்கள்; புலனடக்கம் கொண்டு மனத்தை ஒருவழிப்படுத்த வல்லவர் சிவப்பேறு பெறுவர் ' என்பன இவர்தம் அறிவுரைகளாகும். சம்பந்தரது திருக்கோடிக்ா திருப்பதியமும், நெஞ்சுக்கு அறிவுறுத்தும் முறை யில் பாடப்பட்ட அப்பரது ஆரூர்த்திருத்தாண்டக மும், மக்களுக்கு ஏற்ற சமய அறிவுரைகளாகக் கொள்ளற்பாலன. பல பதிகங்களில் கோவில் வழிபாடு, கோவில் தொண்டு செய்தல், தல யாத்திரை, அடியார் கூட்டுறவு, அடியார்க்கு உண வளித்தல் என்பனவும் வற்புறுத்தப்பட்டுள்ளன. எட்டாம் திருமுறை

மணிவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோ வையாரும் எட்டாம் திருமுறை எனப்படும். இவர் காலத்துப் பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன். அவன் இரண்டாம் வரகுணன் என்பது அறிஞர் பலர் கருத்து. மணிவாசகர் காலத்தில், சங்கரரது அத் வைதக்கொள்கை நாட்டில் மிகுதியாகப் பிரசாரம் செய்யப்பட்டதுபோலும் இவர் அதனை, " மிண்டிய மாயாவாதம் என்னும் சண்டமாறுதம் சுழித்தடித்து ஆர்க்கிறது” என்று குறித்துள்ளார். பெண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/106&oldid=678248" இலிருந்து மீள்விக்கப்பட்டது