பக்கம்:சைவ சமயம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 115

தமிழர் பாடிய தமிழ்க் காவியம் இஃது ஒன்றே என்பது கவனிக்கத்தக்கது. இதன் கண் பிராமணர் முதல் பறையர் ஈருக உள்ள பலசாதி மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு முறைகள், நாட்டின் பெரும் பிரிவுகள் உட்பிரிவுகள், நாட்டு ஆட்சி முறை, சமண-பெளத்த-சைவ சமயக் கருத்துக்கள் இன்ன பிறவும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. இதன்கண் கிடைக்கும் இச் செய்திகள் சோழர் கால இலக்கியங்கள் எதனிலும் கிடைக்கா. ஒரு பக்கம் பல்லவர் கால வரலாற்றையும் மற்ருெரு பக்கம் சோழர்கால நாட்டு நிலையையும், மொழி நிலையையும், சைவ சமய நிலையையும், உள்ளடக் கிக்கொண்டுள்ள இந்நூல், தமிழர் நற்பேற்றின் பயனுய்த் தோன்றியது என்னல் மிகையாகாது. இந் நூலிலிருந்து சேக்கிழாரது இலக்கியப் புலமை, இலக்கணப் புலமை, திருமுறைப் புலமை, இசைநடனம்-மருத்துவம்-வான நூல் முதலிய பல்கலைப் புலமை, சைவ சித்தாந்த அறிவு முத்லியவற்றை நன்கறியலாம். இவை விரிப்பிற் பெருகும், பெரிய புராணம் ஏற்பட்ட பின்னரே அறுபத்துமூன்று நாயன்மார்கட்கும் சிற்பங்கள் ஏற்பட்டன, விழாக் கள் பெருகின என்னும் விவரங்களைச் சோழர் காலக் கோவில்களிலிருந்தும் கல்வெட்டுக்களிலிருந் தும் நன்கறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/114&oldid=678256" இலிருந்து மீள்விக்கப்பட்டது