பக்கம்:சைவ சமயம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சித்தாந்த சாத்திரங்கள்

சைவ சித்தாந்த சாத்திரங்கள்

1. திருவுந்தியார், 2. திருக்களிற்றுப்படியார், 3. சிவஞான போதம், 4. சிவ்ஞான சித்தியார், 5. இருபா-இருபஃது, 6. உண்மை விளக்கம், 7. சிவப்பிரகாசம், 8. திருவருட் பயன், 9. விளுவெண்பா, 10. போற்றிப் பஃருெடை, 11 கொடிக் கவி, 12. நெஞ்சுவிடுதூது: 18. உண்மை நெறி விளக்கம்,'14. சங்கற்ப நிராகரணம் என்பன சைவ சித்தாந்த சாத்திரங்கள். இவை ஒவ்வொன்றைப் பற்றியும், இடச் சுருக்கம் கருதி, ஓரளவு இங்குக்

காணலாம்.

1. திருவுக்தியார்

இது சிவஞான போதத்திற்கு முற்பட்ட நூல். இதனைச் செய்தவர் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனர். இந்நூல் சிவஞான போதத்தைப் போலச் சித்தாந்தக் கருத்துக்களைக் கோவைபடக் கூருது, அவ்வப்போது ஆசிரியர்க்குத் தோன்றிய உணர்ச்சி அநுபவத்தைக் கூறும் 45 செய்யுட்களை உடையது. ஆயின், இவ்வநுபவப் பாடல்கள், சமயசாத்திரங்கள் போலவே, கடவுள்-உயிர்-உல கம் என்னும் மூன்று பொருள்களின் இலக்கணத் தையும், பயன்களையும், பயன் அடையும் நெறி களையும் விளக்குவனவாகும். 1. இந்நூல் கி. பி. 1147 - இல் செய்யப்பட்டதென்பர் . சித்தாந்த சாத்திரம், இரண்டாம் பதிப்பு: P. 669,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/115&oldid=678257" இலிருந்து மீள்விக்கப்பட்டது