பக்கம்:சைவ சமயம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 117

கடவுள் கிலை

பரம்பொருள் சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்பது; இயற்கையாகவே மலம் அற்றது; அறிதற்கு அறியது; ஆயினும், உயிர்கள் உய்யு மாறு கருணையாக விளங்குவது; அவ்வருள் காரண மாக அருவத்திலிருந்து உருவமாக வெளிப்படுவது. அது தானகவே அவ்வுருவைக்கொள்ளும். அப்பரம் பொருள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் உயிர் கட்குக் கூட்டுவது; பாவனைக்கு அப்பாற்பட்டது; ஆன்ம அறிவால் அறியப்படாதது; உயிர்களைப் பக்குவப் படுத்துவதற்காகக் கள்ளனைப்போல மறைந்து நின்று, தியானம்-மந்திரம்-சைவ வேடம் இவற்ருல் உயிர்களை நல்வழிப்படச் செய்வது; பக் குவம் முதிர்ந்தபோது குருவடிவில் வெளிப்பட்டு, தீட்சை செய்து, உண்மை ஞானத்தை உணர்த்து வது; உயிர்கள் செய்தவத்திற்குப் பயன் அளிப் பது; தன் தன்மை அருளி, உயிர்களை வீடு பெறச் செய்வது." -

உயிரின் இயல்பு

உயிர்கள் பல. அவை பர்ச பந்தத்தால் கம் டுப்பட்டவை; முத்தி நிலையில் பாசம் என்னும் மலம் அற்று நிற்பவை, மெஞ்ஞான நிஷ்டை கூடிய மக்கள் பிறவிப் பெருங்கடல் நீந்தினவராவர்; அவர்கள் ஞானக்கண்ணுல் நோக்கும் இயல்பினர்; கசிந்த உள்ளம் உடையவர் ஆதலின் கடவுளை உணரும் சக்தி பெற்றவராவர். முத்தி நிலையிற்

2. செ. 1, 5, 9, 12, 13, 20, 22.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/116&oldid=678258" இலிருந்து மீள்விக்கப்பட்டது