பக்கம்:சைவ சமயம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சித்தாந்த சாத்திரங்கள்

சிவமாந் தன்மை பெற்றவராயினும் உயிர்கள் உயிர்களே."

சிவமாக்தன்ம்ை பெற வழி

மக்கள் மலம் நீங்கி நிற்றற்கு முயற்சி, சிவன் பால் மறவாத அன்புடைமை, சிவத்தைப் பற்றியே எண்ணியிருத்தல் என்பவை வழிகள் ஆகும். இவற் ருல் உலகின்பாற் செல்லும் பற்றுச் சிவத்தின் பால் செல்லும்; வழிபாடு உறுதிப்படும். அந்நிலை யில் சிவம் குருவாக வந்து, சிவ-திட்சை செய்து, சிவஞானம் சேர்க்கும். அதனுல் திருவருட்சக்தி மனத்தின்கண் பொருந்தியிருக்கும்." முக்தி கிலை

இது சொல்லொணு இயல்புடையது; அறி விற்கு எட்டாத உயர்நிலையது; திருவருள் பெற்ற வர் இன்புறு நிலை. இந்நிலை அடைந்தோரே, 'தொண்டர்' எனப்படுவர்; நனவில் தூய மேல் நிலையில் இருப்பவர். அவர்கட்குச் சிற்றின்பமும் பேரின்பம் ஆகும். அவர்கள் பித்தரைத் போலக் காணப்படுவர். ஆயின், அவர்கள் கருத்தும் உயி ரும் இறைவன் நினைவை விட்டு நீங்கா இயல்பின."

2. திருக்களிற்றுப்படியார்

இதுவும் சிவஞான போதத்திற்கு முற்பட்ட நூல். இதனைச் செய்தவர் மேற்சொன்ன உய்ய வந்த தேவ நாயனர் மாணவர்க்கு மாணவர். இவர்

3. செ. 2, 3, 7, 11, 36.

4. செ. 8, 10, 14, 16, 18, 19, 21, 23, 25, 27, 28, 34,

37-40,

5. செ. 4, 6, 29, 30, 31, 33-35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/117&oldid=678259" இலிருந்து மீள்விக்கப்பட்டது