பக்கம்:சைவ சமயம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 119

திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனர் என்னும் பெயர் கொண்டவர்." இந்நூல் 100 வெண்பாக்களை உடையது. திருவுந்தியாரின் கருத்தைச் செவ்வை யாக விளக்குவது. இது பொன்னம்பலத்திலுள்ள திருக்களிற்றுப்படியில் வைக்கப்பட்டுப் பாராட்டப் பட்டதாதலின், திருக்களிற்றுப்படியார் எனக் கார ணப் பெயர் பெற்றது. இந்நூலில், நாயன்மார் வரலாறுகளிலிருந்தும் உதாரணங்கள் தந்து வல் வினை, மெல்வினை என்பன விளக்கப்பட்டுள்ளன. சாத்திர விளக்கங்கள் சில உவமைகளால் தெரி விக்கப்படுகின்றன. திருக்குறட்பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் கொண்டு அவற்றின் பொருளை

விளக்கும் செய்யுட்கள் இன்பம் பயப்பன."

இறை

பரம்பொருள் சக்தி-சிவம்ாக விளங்கும். அவ் வாறு விளங்குவது உலகிற்குத் தாயும் தந்தையு மாகிய நிலையாகும். தூய பொன்னின் நிறம், நகைகளாக மாறிய போதிலும் பொற்கட்டியாய் நின்றபோதும் ஒரு தன்மையாய் விளங்குதல்போல, இறைவன் உலகில் அத்துவிதமாகக் கலந்து ஒன்

6. @afraud கி. பி. 1177 என்பர்-சித்தாந்த சாத்திரம்,

இரண்டாம் பதிப்பு P. 669 T. S. C. P. 33. 8. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்

சார்புணர்தல் தானே தியானமுமாம்-சார்பு கெடவொழுகி னல்ல சாமதியுமாங் கேதப் படவருவ தில்லைவினைப் பற்று. " (செ. 34) " வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால் வேண்டினஃ தொன்றுமே வேண்டுவது-வேண்டினது வேண்டாமை வேண்டவரு மென்றமையால்வேண்டிடுக வேண்டாமை வேண்டுமவன் பால்." (செ. 45.) 9. செ. 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/118&oldid=678260" இலிருந்து மீள்விக்கப்பட்டது