பக்கம்:சைவ சமயம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சித்தாந்த சாத்திரங்கள்

றன்ருய் இரண்டன் ருய் நிற்பன்". கடல் நீரி லிருந்து உப்பு விளைவதுபேர்ல, இறைவன் அரு ளாலே திருமேனி கொள்வான். இவ்வாறு கொள் ளும் திருமேனிகளுள் ஆசிரியத் திருமேனி சிறப் புடையது. கடல் நீரை முகந்து சென்று நன்னீர் பொழியும் முகில்போல ஆசிரியணுக வெளிப்படும் இறைவன் அநுபவப் பயனே அறிவுரையாக உப தேசிப்பன். இறைவன் மெய்ஞ்ஞானிகளைச் சார்ந்து ஆவேசித்து நின்று உபதேசித்தலும் உண்டு. இவ்வுபதேசம் மெய்ஞ்ஞானிகளது செய லன்று; இறைவனது செயலே ஆகும். மலம் எல்லாம் நாற்றம் உடையனவாயினும், தூய்மை பொருந்திய பசுவின் சாணம் பிறமலங்களை எல் லாம் நீக்குதல் போல ஆசிரியன் மக்களுள் ஒரு வனே எனினும், சிவன் அவனை நிலைக்களமாகக் கோடலால், அவன் பிறவியை ஒழிக்க வல்லவனு வன்: கடலகத்தே அலைகளால் அலைப்புருது ஆடும்படி நின்றவர்க்கும் கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அளத்தல் அரிது. அதுபோலக் கடவுள் அருள் பெற்றவராயினும் அவர்கள் அவ னது முழுப் பெருமையை அறிந்தவராகார்" உயிர்கள், தம் அறிவிற் சிவம் விளங்கத் தலைவனை யும் (கடவுளையும்) தம்மையும் உணரும்; உணர்ந்த பிறகு உடலுடன் இருப்பினும் பற்று நீங்கப்பெற் றுச் செத்தாரைப் போலத் திரியும்; அவை சிவன் வயப்பட்டு நிற்குமாதலால் மீண்டும் உலக நிகழ்ச்சி களில் புகா ஆற்று நீர் கடலில் கலந்து கடல் நீராகி, மீண்டும் ஆற்றின் படுகையில் மேலேறினும்

10. செ. 79, 11 செ. 90. 12. செ. 66, 13 செ. 7. 14. செ. 90. 15 செ. 47.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/119&oldid=678261" இலிருந்து மீள்விக்கப்பட்டது