பக்கம்:சைவ சமயம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சித்தாந்த சாத்திரங்கள்

உள்ள இறைவனை, யோக முடிவில் கேட்கும் சிலம் பொலி வழியே சென்று அடைய முயலவேண்டும். " நான் பிரமம் என்பது மயக்கவுணர்ச்சியே யாகும்." உயிரினிடம் சிவ வடிவமாகிய ஞானத் தைக் கண்டு வணங்கிச் சிவபெருமானுக்கு அன்பு நீரால் திருமஞ்சனமாட்டித் தன்னை அவனுக்கு வாடாத ஒரு மலராகச் சார்த்தி வழிபடின் பிறவி ஒழியும்." அறிவு நெறியும் அன்பு நெறியும் பிறப்பை அறுக்க வல்லவை." இறைவனை அணைந்தோர் இலக்கணம்

இறைவன அணைந்தவரே அடியாராவர். ஆல மரத்தைத் தன்னகத்தே அடக்கிய வித்துப் போலத் திருவருளைத் தன்னகத்தே அடக்கியவர் அடியார்." இறைவன் பெருமையை அடியார் அறிவர். அடியார் பெருமையை இறைவன் அறி வான். இதற்குக் கண்ணப்பரும் காளத்தியப் பருமே சான்ருவர். இறைவன் பக்தி வலையிற் படுபவன் என்பது தெளியலாம். ஞான நெறி நின்றவர்க்குக் காலம், இடம், திசை, இருக்கை என்பன இல்லை." சிவஞானமும், சிவபோகமும் வித்தும் முளையும் போல்வன." 3. சிவஞானபோதம்

இது மேற்சொன்ன 14 சாத்திரங்களில் தலை சிறந்தது; சித்தாந்த உண்மைகள் கோவைபடச் செய்யப்பட்ட செந்தமிழ் நூல். திருவெண்ணெய் 22 செ. 25, 33, 23. செ. 85 24 செ. 44, 25 செ. 100, 26. செ. 57, 27 செ. 52. 28. செ. 52. சேந்தனரமுது' என்று இப்பொழுதும் 'திருவாதிரை-களி' என்று தில்ல்ைப் 'ಶ್ವಕ್ಗಿಲ್ಲ நிவேதிப்பது வழக்கம், 29. செ. 27-30,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/121&oldid=678263" இலிருந்து மீள்விக்கப்பட்டது