பக்கம்:சைவ சமயம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 123

நல்லூர்-மெய்கண்ட தேவர் என்னும் வேளாள அறி ஞர் செய்தது; உரைநடைப் பகுதியும் செய்யுட் பகுதியும் உடையது. உரைநடைப் பகுதி மேற் கோள்களையும் ஏதுக்களையும் உடையது; செய்யுட் பகுதி 12 சூத்திரங்களாகவும் 81 வெண்பாக்களாக வும் உள்ளது. இப்பன்னிரண்டு சூத்திரங்களும் ரெளரவ ஆகமத்தில் உள்ள 12 வடமொழிச் சூத் திரங்களின் மொழி பெயர்ப்பு என்பது டாக்டர் ரமண சாஸ்திரி போன்ற ஒருசார் அறிஞர் கருத்து." சுவாமி வேதாசலம், கா. சுப்பிரமணிய பிள்ளை போன்ற அறிஞர்கள் அது முதல் நூலே என்று கருதுகின்றனர். தென்னிந்திய சைவ சித்தாந்த LüᏜᏋfᎢ சமாஜத்தின் தலைவரான M. பாலசுப்பிரமணிய முதலியார் (B. A., B. L.,) சிவஞான போதம் மொழிபெயர்ப்பன்று என்ப தற்கு 120 காரணங்கள் காட்டி 1949-இல் சிறுநூல்

ஒன்றை வெளியிட்டுள்ளார்."

மெய்கண்டார் கி. பி. 13-ஆம் நூற்ருண்டின் முற்பகுதியிழ் வாழ்ந்தவர். இவர் பரஞ்சோதி மா

முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானுேபதேசம் பெற்றவர்." இவர் நூலில் உள்ள முதல் மூன்று சூத்திரங்கள் பிரமாண-இயல் எனவும், அடுத்த "மூன்றும் இலக்கண-இயல் எனவும், அடுத்த மூன்று சூத்திரங்கள் சாதன இயல் எனவும், கடைசி மூன் றும் பயன்-இயல் எனவும் பெயர்பெறும்.

i பிரமாண-இயல் பதி, பாசம், பசு என்னும் மூன்றும் உண்மை என்பதை 3 சூத்திரங்களால் 31, Colos, 2, part I, P. 531 including foot-note No. 43.

32. S. C. PP. 45–73; M. S. PP, 11–27. 33. இதன் விலை அணு 2. 34. S. M. P. 9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/122&oldid=678264" இலிருந்து மீள்விக்கப்பட்டது