பக்கம்:சைவ சமயம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - சித்தாந்த சாத்திரங்கள்

விளங்கும். இலக்கண இயல் பசு, பாசம், பதி என் னும் மூன்றன் இலக்கணங்களை முறையே மூன்று சூத்திரங்களால் விளக்கும். சாதன இயல் என்பது சாதனம் அடைதற்குரியவர் உயிர்கள் என்பதை யும், இறைவன் திருமேனி கொண்டு ஞானம் உணர்த்தலையும், அங்ங்னம் ஞானம் கைவரப் பெற்ற உயிர் ஐந்தெழுத்து ஓதிப் பயன் பெறலும் முறையே மூன்று சூத்திரங்களில் விளக்கும். பயன்-இயல் என்பது பாச நீக்கம், சிவப்பேறு, சிவப்பேற்றினை நிலை நிறுத்த நிகழ்வன இன் னவை என்பன முறையே மூன்று சூத்திரங்களில் விளக்கும். இவ்வுண்மைகள் யாவும் தருக்க முறை யில் நிலைநிறுத்தப்பட்டுள்ளள. 1. பிரமாண இயல்

முதற் சூத்திரத்தில் கடவுள் உண்மையும், அவர் எல்லாவற்றையும் ஒடுக்கி மீளத் தோற்று விக்கும் முதற் பெருமாகிைய சிவன் என்பதும் கூறப்பட்டுள்ளன. கடவுள் உயிர்களுன் அத்து விதமாக நின்று அவைகட்கு మఓT&T ஊட் டும் முறையும், உயிர்கட்கு மலபந்தத்தால் பிறப்பு இறப்பு நிகழும் முறையும் 2-ஆம் சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளன. மூன்ரும் சூத்திர்ம் உயிர் சூன் யத்தை அறிவது, பருவுடல், அறிகருவிகள், நுண்' னுடல், பிராணவாயு முதலியவற்றிற்கு வேருனது, தானே அறிவதன்றி உணர்த்த உணர்வது, உடற் கரணங்கள் கூடியிருப்பினும் அவற்றிற்கு வேருய் நின்று அறிவது என்பன குறிக்கப்பட்டுள்ளன. 2. இலக்கண-இயல்

உட்காரணங்கள் ஆகும் சித்தம், மனம், அகங் காரம், புத்தி என்பவற்றுள் ஒன்று அன்ருய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/123&oldid=678265" இலிருந்து மீள்விக்கப்பட்டது