பக்கம்:சைவ சமயம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 125

வேருய் நிற்பது உயிர். அது அநாதி கால முதலே ஆணவ மலத்தாற் கட்டுண்டு கிடப்பது. புற அகக் கருவிகளும் உயிரும் அமைச்சும் அரசும் போல விளங்குவன. உயிர்கட்கு அக்கருவிகள் துணை செய்வன. இவை யாவும் தொழிற்படுங்காலம் உயிர்கட்கு நனவு நிலை என்ப்படும். இவற்றுட் சில குறைந்த காலம் உயிர்கட்குக் 'கனவு நிலை'; மேலும் சில குறைந்த பொழுது உறக்க நிலை எனப்படும். இவை யாவும் நீங்கி உயிர் தன்னிலை நின்றபோது பேருறக்க நிலை எனப்படும். உயி ரின் அகங்காரமும் ஒடுங்கிய நிலை உயிர்ப்பு அடக் கம் எனப்படும். இவை அனைத்தும் நான்காம் சூத்திர்த்துட் கூறப்பட்டுள்ள செய்திகள்.

கருவிகள் அறிவற்றன. ஆதலின் தம்மையும் அறியா; , தம்மைச் செலுத்தும் உயிரினையும் அறியா, அவைபோல உயிர்களும் தம்மை அறியா; தம்மைச் செலுத்தும் இறைவனையும் அறியா என் பது ஐந்தாம் சூத்திரத்துப் பொருளாகும். சத்து, அசத்து என்னும் இரு மொழிகட்கும் இலக்கணம் உரைப்பது ஆரும் சூத்திரம். சத்து என்றும் கெடின்றி விளங்கும் பொருள். எனவே, இறை ஒன்றே அவ்விலக்கணத்திற்கு இலக்கியமாகும். ஆயினும், சைவ சித்தாந்தத்தில் முப்பொருள்களா கிய இறை, உயிர், உலகம் என்பன என்றும் உள்ள பொருள்களாக ஒப்புக்கொள்ளப்பட்டவை. ஆதலின் அவை மூன்றும் சத்தே ஆகும். உயி ரும் உலகமும் விகாரமடைகின்றமையின், அசத் தாதல் பெறப்படும். இம்மூன்றினையும் வேறு பிரித்து அறிதற்கு அவை முறையே சிவசத்து, சத-சத்து, சட-சத்து என்று குறிக்கப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/124&oldid=678266" இலிருந்து மீள்விக்கப்பட்டது