பக்கம்:சைவ சமயம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சித்தாந்த சாத்திரங்கள்

3. சாதன- இயல்

சார்ந்ததன் வண்ணமாதல் உயிரின் சிறப் பிலக்கணம். அஃது அசத்தாகிய உலகத்தையும் சத்தாகிய பரம் பொருளையும் அறியவல்லது; அசத்தை விட்டுச் சத்தைப் பற்றக்கூடியது என் பது ஏழாம் சூத்திரத்தில் விளக்கப்படுகிறது. உயிர் களின் தவத்தால் இறைவன் குருபரன் வடிவங் கொண்டுவந்து, பக்குவம் உடையார்க்கு ஞானத்தை உணர்த்தித் தன்பால் அவர்களைச் சேர்ப்பன் என் பதை எட்டாம் சூத்திரம் விளக்குவதாகும், ஞானம் பெற்றவர் ஐந்தெழுத்து ஒதி, ஞான நிலையைக் காக்க வேண்டும் என்பது ஒன்பதாம் சூத்திரத்திற் கூறப்படுகிறது. - 4. பயன்-இயல்

இவ்வாறு ஞானத்தைப் பேணும் உயிர்கள் இறைவன் தம்முடன் ஒற்றித்து நிற்றலால் பாச நீக்கம் பெறும் என்பது பத்தாம் சூத்திரத்துள் விளக்கப்படுகிறது. இறைவன் உயிர்கட்குத் துணை யாக நின்று சிவப்பேறு அல்லது முத்தி நிலையைக் காட்டுவான், அவை காணுமாறு உதவியும் செய் வான் என்பது பதினேராம் சூத்திரத்தில் கூறப் படுகிறது. சீவன் முக்தர்கள் மல நீக்கக் கருத் துடையவராய், அடியார் இணக்கம் உடையவராய், சிவ வேடத்தையும் சிவன் கோவிலையும் வழிபடும் நியமம் உடையவராய் நிற்பர் என்பது 12-ஆம் சூத்திரத்தில் விளக்கப்படுகிறது. 4. சிவஞான சித்தியார்

இதனையும் அடுத்துவரும் இருபா இருபஃது என்னும் நூலையும் இயற்றியவர் மெய்கண்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/125&oldid=678267" இலிருந்து மீள்விக்கப்பட்டது