பக்கம்:சைவ சமயம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 127

முதல் மாணவராகிய அருள்-நந்தி-சிவாசாரியர் என் பவர். சிவஞான சித்தியார்' என்றும் நூல் சிவ ஞான போதத்தின் வழிநூல்; பரபக்கம், சுபக்கம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. சிவஞான போதத்தில் அவையடக்கம் கூறிய ஒரே பாட்டினை அடிப்படையாகக்கொண்டு, பர பக்கம் தோன்றியது. சுபக்கம் ', சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களின் பொருளை 12 அதி காரங்களில் விரித்து விளக்குவது.

சிவ ஆகமப் பிரமாணங்களை ஒப்புக்கொள் ளாத சமயங்கள் புறச்சமயங்கள் எனப்பட்டன. வைதிகச் சார்பில்லாத சமயங்கள் புறப்புறச் சம யங்கள் எனவும். வைதிகச் சார்புடையவை 'புறச்சமயங்கள் எனவும் கூறப்பட்டன. புறப் புறச் சமயிகளுள் உலகாயதர், செளத்ராந்திகர், யோகசாரர். மாத்யமிகர், வைபாடிகர் ஆகிய நால் வகைப் பெளத்தர், நிகண்டவாதிகள், ஆசீவகர் என்னும் இருவகைச் சமணர் அடங்குவர். பட்டா சாரியன் மதம், பிரபாகர மதம் என்னும் இருவகை மீமாம்சக மதமும், சத்தப் பிரமவாதம்-மாயாவாதம்பாற்கரிய வாதம்-கிரீடப் பிரம வாதம் என்னும் நால்வகை ஏகான்ம வாதமும், பாஞ்சராத்ரிகம் என்னும் வைணவ மதமும் புறச்சமயத்துள் அடங் கும். இவர் அனைவருடைய சமயக் கொள்கை களைக்கூறி, சித்தாந்தத்துடன் முரண்வனவற்றை மறுத்துச் சித்தாந்தத்தை நிலை நிறுத்துவதே 'பர பக்கம்' என்பது. இது 301 செய்யுட்களைக் கொண்டது.

சுபக்கத்தில் சிவஞான போதப் பொருளே விரித்துரைக்கப்படுதலின், அது பற்றிய விபரம்

--م۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/126&oldid=678268" இலிருந்து மீள்விக்கப்பட்டது