பக்கம்:சைவ சமயம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சித்தாந்த சாத்திரங்கள்

இங்குத் தேவை இல்லை. இப்பகுதி 828 செய்யுட் கள் கொண்டது. சித்தியாரின் பெருமையை, " சிவனுக்கு மேல் தெய்வமில்லை, சித்திக்கு விஞ்சிய நூலில்லை” என்னும் பழமொழியாலும் தாயுமானவர் பாராட்டுரையாலும் நன்குணர svirub.85 5. இருபா-இருபஃது

இது, ஞான-குருவாகிய மெய்கண்டாரை முன் னிலையாக்கி, வினவுதல் போலவும், அவர் விடை கூறுதல் போலவும், சித்தாந்தக் கருத்துக்களை 20 செய்யுட்களில் கூறும் நூல். ஆணவத்தின் எட்டு இயல்பும், மாயையின் ஏழு இயல்பும், கர்மத்தின் ஆறு இயல்பும் இதன் கண் கூறப்பட்டுள. சைவத் திருமுறைகளுள் விளங்கும் அருள் தொடர்களா கிய, 'காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே", 'உன்னிலுன்னும் உன்விைடில் விட்டிடும்' என் பவற்றுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இரு நிலய்ைத் தீயாகி " என்று தொடங்கும் அப்பர் திருத்தாண்டகத்திற்கும், 'ஆட்பா லவர்க்கருளும் ஆதிமாண்பும்" என்றும் திருஞான சம்பந்தர் திருப்பாசுரத்திற்கும் பொருள் விளக்கம் பாராட்டத் தகும் முறையிற் செய்யப்பட்டுள்ளது. இச்சிறு நூல் மெய்கண்டாரது பெருஞ்சிறப்பினை அறிவிக் கும் பெருமையுடையது. - 6. உண்மை விளக்கம்

இது மெய்கண்ட தேவரது மற்ருெரு மாணவு ரான திருவதிகை-மனவாசகம் கடந்தார் என்பவூர் 35. Ennatkanni, Gurumarabin-Vanakkam, V. 5. 36.

தேவாரம், சாமிநாத பண்டிதர் பதிப்பு, பக். 1244 37. அப்பர், பக்.-510, செ. 138. சம்பந்தர். பக். 311. செ. 4; 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/127&oldid=678269" இலிருந்து மீள்விக்கப்பட்டது