பக்கம்:சைவ சமயம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 129

செய்தது; 58 வெண்பாக்களை உடையது. இது முப் பத்தாறு தத்துவங்களையும், ஆணவம் இருவினை என்பவற்றின் இயல்பையும், ' ஆன்மாவின் இயல் பையும், " கடவுளின் இயல்பையும், “ ஐந்தெழுத் தின் உண்மையையும், “ தம் ஆசிரியரிடத்துத் தமக்கு விளக்கும்படி வேண்ட, ஆசிரியர் விடைய ளித்ததுபோலச் செய்யப்பட்ட நூலாகும். முத்தியி லும் மூன்று பொருளாகும் இறை, உயிர், உலகம் உண்டு என்று விளக்கும் பெருமையுடையது இன் னுால்." உமாபதி சிவாசாரியார் இயற்றிய நூல்கள் 1. சிவப்பிரகாசம்

இது சிவஞான போதத்திற்குச் சார்பு நூலா கும். இதன் பாயிரத்துள் திருக்கயிலாய பரம்பரை ஆசிரியர்கள் இன்ஞர் என்பதும், சைவ நூல்களின் இயல்பும், தீட்சை வகைகளும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் ஓதப்பட்டுள்ளன. நூலின் அவை யடக்கத்தில் நூல்களை ஆராய்ந்து உண்மை தெரி யும் முறை நன்கு விளக்கப்பட்டுள்ளது. பழமை பற்றி ஒன்றை நன்றென்றும், புதுமை பற்றி ஒன் றைத் தீதென்றும் கொள்ளுதல் தவறு என்பது ஆசிரியர் கருத்து. -

இந்நூல் நூறு விருத்தங்களை உடையது. இதில், சைவ சித்தாந்த அத்வைத நிலை-உடலும் உயிரும், கண்ணுெளியும் கதிரொளியும், உயிரறிவும் கண்ணுெளியும் போல இரண்டறக் கலத்தல் என்று ளக்கம் கூறப்பட்டுள்ளது. ஆணவம், கன்மம், 39. செ. 4-21, 40. செ. 22. 41. செ, 23-26, 42. செ. 27-29 43. செ. 30-44 44 செ 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/128&oldid=678270" இலிருந்து மீள்விக்கப்பட்டது