பக்கம்:சைவ சமயம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழகத்துக் கோவில்கள்

யுடைய வாயில்களும், அவ்வாயில்கட்குத் துருப் பிடியாதபடி செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங் களும் பொருத்தப்பட்டிருந்தன என்பது நெடுநல் வாடை (வரி 76-88) அடிகள் அறிவிக்கும் அரிய செய்தியாகும், சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர்க்கு இறைவன் நடனக் கோலத்தைக் காட்டி அருளி ன்ன் என்பது புராணச் செய்தி. பதஞ்சலி முனிவர் காலம் கி. மு. 150 என்று ஆராய்ச்சியாளர் அறை வர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர் ஏற்ற சிதம்பரத்தில் உள்ள திருக்கோவில் கி. மு. 150-க்கு முற்பட்டதாதல் அறிக. அங்குள்ள நடரா சர் மண்டபம் மரத்தால் கட்டப்பட்டிருத்தலும் அதன் பழைமைக்குச்சான்ருகும். ' -

கி. பி. 450 முதல் 500-க்குள் தமிழகத்தை ஆண்ட கோச்செங்கட்சோழன் 70 கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் கூறியுள்ளார். அவர்க்கு முன்னரே அப்பரும் சம்பந்தரும் இத னைத் தம் பதிகங்களிற் குறித்துளர்.

தேவாரகாலத்துக் கோவில்கள்

தேவாரகாலத்தில் தமிழகத்தில் ஏறத்தாழ 500 கோவில்கள் இருந்தன. அவை அனைத்தும் மரம், செங்கல், மண், உலோகம் இவற்ருல் ஆனவை. அவை, (1) பெருங்கோவில், (2) இளங்கோவில், (3) மணிக்கோவில், (4) ஆலக்கோவில், (5) தூங் கானை மாடம் முதலிய பலவகைப்படும். இவற்றுள் தம் காலத்தில் பெருங்கோவில்கள் 78 இருந்தன என்று அப்பரே அறைந்துள்ளார். பெரிய கோவில்களைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை 11, Navaratnam's 'S, I. Sculpture.' PP, 56–57,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/13&oldid=678155" இலிருந்து மீள்விக்கப்பட்டது