பக்கம்:சைவ சமயம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 15

எழுந்தருளச் செய்துள்ள (பெரியகோவில் திருச் சுற்றில் உள்ள) சிறிய கோவிலே இளங்கோவில்’ எனப்படும். பிறவும் இளங்கோவில் எனவும் பெயர் பெறும். எனவே, தேவார காலத்திற்கு முன்பே பல கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன என்பது தெளிவாகிறதன்ருே ? இதல்ை, அவை முதலிற் கட்டப்பட்ட காலம் மிகப் பண்டையது என்பதும் வெளியாகுமென்ருே? தேவார காலத்தில் விமானம் கொண்ட கோயில்கள் இரு ந் த ண என்பது பெண்ணுகடம் தூங்கானை மாடம் கோவில் அமைப் பைக்கொண்டு நன்கறியலாம். விமானம் 'தூங்கும் யானை வடிவில் அமைந்ததாகும். திரு இன் னம்பர், திருத்தணிகைக் கோவில் விமானங்கள் இம்முறையில் அ ைம ந் த ைவ. திரு அதிகைக் கோவில், திருக்கடம்பூர் இவற்றின் உள்ளறைகள் (மூலத்தானம்) தேர் போன்ற அமைப்பு உடை யவை ; உருளைகளும் குதிரைகளும் பூட்டப்பெற் றவை. திருச்சாய்க்காட்டுக் கோவிலை ஒட்டித்தேர் போன்ற விமானம் ஒன்று உருளைகளுடன் உள்ளது. பழையகோவில்கள்

இந்த விமான அமைப்புடைய தேர்போன்ற கோவில்களே பழையவை. இன்று காணப்படும் கோவில்களை அடுத்துள்ள தேர்கள் மிகப்பழைய காலத்தில் மரக்கோவில்களாக இரு ந்த ைவ. மனிதன் மரக் கோவில்களைப்போலச் செங்கற்கள் கொண்டு பிற்காலத்தில் கோவில்கள் அமைத்தான். சான்ருக, நகரியில் உள்ள சில கோவில்களைக் காணலாம். அவை கி. மு. 250-இல் ஆக்கப் பட்டவை. அவற்றைச் சுற்றிக் கற்சுவர்கள் ' 12 Q. C. Gangooly's ‘Indian Architecture,' P. 13,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/14&oldid=678156" இலிருந்து மீள்விக்கப்பட்டது